இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி முடித்ததை அடுத்து இந்திய அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த மூன்று இந்திய வீரர்களை ரவி சாஸ்திரி வாத்து விருந்து என வித்தியாசமான முறையில் கிண்டல் செய்து இருக்கிறார்.
ஐந்து பேர் டக் அவுட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் குறிப்பிடத்தக்க விதமாக விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ப்ராஸ் கான், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தங்களது ரன் கணக்கை திறக்காமலேயே ஜீரோ ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
அதற்குப் பிறகு நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நிலையில் வர்ணனையாளர் குழுவில் ரவி சாஸ்திரி இருந்தபோது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த விராட் கோலி கே.எல். ராகுல் மற்றும் சர்ப்ராஸ்கான் ஆகியோரின் பக்கம் கேமரா திரும்பியது. ஏற்கனவே இந்திய அணி குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனதைக் கண்ட ரவி சாஸ்திரி டக் அவுட் ஆன மூவரைக் கண்டதும் விரக்தியில் தனது விமர்சனத்தை வெளியிட்டார்.
ரவி சாஸ்திரி வித்தியாசமான முறையில் விமர்சனம்
அந்த மூவரைக் கண்ட ரவி சாஸ்திரி “நீங்கள் இந்திய அணியின் ஸ்கோர் கார்டு பார்க்கும் போது அங்கே ஒரு வாத்து விருந்து நடக்கும் என்று நிச்சயமாக நினைப்பீர்கள். அதாவது இந்தியாவின் ஸ்கோர் கார்டில் ஐந்து பேர் டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்கள். இது இந்தியாவின் சொந்த மண்ணில் கேள்விப்படாத ஒன்று. இது ஒரு குறைந்த ஸ்கோர் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதில் டக் அவுட் ஆன மூன்று பேர் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ரோகித் தோனியை பார்த்து கேப்டனா இத கத்துக்கோங்க.. இன்னைக்கு தப்பு செஞ்சிட்டிங்க – மஞ்சரேக்கர் விமர்சனம்
அதாவது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மூவரைக் கண்டதும் ரவி சாஸ்திரி டக் பார்ட்டி அதாவது தமிழில் வாத்து விருந்து என்று வித்தியாசமான முறையில் கிண்டல் செய்து இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை நியூசிலாந்து அணி குவித்திருக்கும் நிலையில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 64 ரன்கள் குவித்து விக்கெட் இழப்பின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.






