இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இன்று துவங்கியிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமாக பும்ரா விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாய் சுதர்சனை விளையாட வைக்காததும் பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது.
ஏழு நாள் போதாதா?
இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிய ரவி சாஸ்திரி கூறும்பொழுது “உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் உங்களிடம் இருக்கிறார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு ஏழு நாட்கள் ஓய்வு எடுக்கும் நீங்கள் மீண்டும் அவருக்கு ஓய்வு கொடுத்தீர்கள். இதை நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது”
“என்னை பொருத்தவரை இந்த முடிவு மிகவும் குழப்பமானது விசித்திரமானது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடும் நிலையில் இருந்தால் நிச்சயம் அவரை விளையாடி இருக்க வேண்டும். இந்த போட்டியில் அவர் விளையாடாதது பெரிய தவறு”
இந்த முடிவு யாருடையது?
“அதாவது இந்த முடிவு முழுக்க கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரின் கையில் இருக்க வேண்டும். மொத்த பயிற்சியாளர் குழுவின் கையில் இருக்கக் கூடாது. இதற்கு முழு பொறுப்பு எடுக்கக் கூடியவர்களாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருமே இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 2 முறை குறுக்கு வழியில் இறங்கிய இங்கி பவுலர்.. அதிர்ஷ்டத்தால் தப்பிய கில்.. களத்தில் என்ன நடந்தது?
“முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஒரு வாரம் நடுவில் இருந்தது. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் போட்டியில் தோற்றதால் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. கட்டாயம் வென்று ஆக வேண்டிய போட்டி. நீங்கள் இந்தத் தொடரில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் உங்கள் சிறந்த பவுலரை விளையாடி இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






