2 முறை குறுக்கு வழியில் இறங்கிய இங்கி பவுலர்.. அதிர்ஷ்டத்தால் தப்பிய கில்.. களத்தில் என்ன நடந்தது?

0
744
Gill

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பேச்சாளர் பிரைடன் கார்ஸ் பந்துவீச்சில் குறுக்கு வழியில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணிகள் எந்த மாற்றங்களும் செய்யப்படாத நிலையில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

ஏமாற்றிய ராகுல் மற்றும் கருண் நாயர்

இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்த கேஎல்.ராகுல் இந்த முறை 26 பந்துகள் விளையாடி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பொதுவாக தொடரில் முதல் போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் அவரது பழக்கம் தற்போதும் தொடர்கிறது.

இந்த முறை சாய் சுதர்சன் நீக்கப்பட்டதால் மூன்றாவது இடத்தில் வந்த கருண் நாயர் சிறப்பாக ஆரம்பித்து ஜெய்ஸ்வால்வுடன் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 31 ரன்னில் எதிர்பாராத விதமாக வெளியேறினார். குறைந்தது அரைசதம் ஆவது அடிப்பார் என்ற நிலையில் ஏமாற்றம் தந்தார்.

- Advertisement -

குறுக்கு வழியில் இங்கிலாந்து பவுலர்

ஒரு முனையில் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்து தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் இந்திய கேப்டன் பில் கவனத்தை சிதைக்கும் விதமாக, பந்து வீச்சின் போது ஓடி வந்து அவருடைய இடது கையை இடது பக்கமாக காட்டி பந்துவீச, கில் உடனடியாக விலகினார். இதற்கு அடுத்த பந்திலேயே எல்பி டபிள்யு அப்பீல் வந்தது. இன்சைடு எட்ஜ் காரணமாக கில் தப்பினார்.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ரோகித் ரெக்கார்டை முறியடித்த ஜெய்ஸ்வால்.. இந்திய அணி ரன் குவிப்பு

இதற்கு அடுத்த பந்தை மீண்டும் பிரைடன் கார்ஸ் வீச ஓடி வரும்போது நாட்டை நாக்கை வெளியே நீட்டிய படி வந்து வீசினார். ஏதாவது ஒரு வகையில் கில் கவனத்தை சிதைக்க வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார். ஆனால் குறுக்கு வழியில் செயல்படுகின்ற காரணத்தினால் இதற்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -