இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கில் கேப்டன்சி குறித்து ரவி சாஸ்திரி கடுமையான முறையில் விமர்சனங்கள் செய்திருக்கிறார்.
இந்திய கேப்டன் கில் இங்கிலாந்து பேட்டிங் செய்யும்பொழுது புதிய பந்தை அறிமுக வீரர் அன்சுல் காம்போஜிடம் கொடுத்தார். மேலும் 68வது ஓவரில்தான் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தார். மேலும் பீல்டிங் வியூகங்கள் மோசமாக இருந்தது. இது குறித்து ரவி சாஸ்திரி விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் கைப்பற்றினார். இப்படிப்பட்ட ஒரு பவுலரை நீங்கள் அடுத்த போட்டியில் 67வது ஓவருக்கு மேல் கொண்டு வருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் அவருக்கு என்ன சொல்கிறீர்கள்? அவர் ஒரு முன்னணி பவுலர் போல இருந்திருக்க வேண்டும். அவர் 30 ஓவர்கள் தாண்டி பந்து வீசி இருக்க வேண்டும். நீங்கள் 60 ஓவர்கள் தாண்டி கொண்டு வந்த பொழுது அவர் இரண்டு விக்கெட் கைப்பற்றுகிறார்”
“மேலும் திட்ட ரீதியாக இந்திய அணி தகுதியற்றதாக இருந்ததாக நான் நினைக்கிறேன். நேற்று புதிய பந்தை சிராஜ் வீசியிருக்க வேண்டும். ஆனால் அறிமுக வீரர் காம்போஜியிடம் கொடுத்தார். இதனால் இங்கிலாந்தின் மீதான அழுத்தம் குறைந்தது. மேலும் 24 மணி நேரங்கள் தாண்டி பவுன்சர் திட்டத்தை தாமதமாக கொண்டு வந்தார்கள். இப்படி நிறைய தவறுகள் கேப்டன்ஷியில் நடந்திருக்கிறது”
“புதிதாக கேப்டன் பொறுப்புக்கு வந்த பொழுது விராட் கோலியை கூட உதாரணமாக கூறலாம். அவர் நிறைய ஆக்ரோஷத்தை கொண்டிருந்தார். அவரை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. மேலும் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பு கொடுத்து செல்ல வேண்டி இருந்தது. விராட் கோலி நாளடைவில் அதற்குள் வந்துவிட்டார்”
இதையும் படிங்க : 16 ஓவர்.. 2 சதங்கள்.. 37 பந்து டிம் டேவிட் சூறாவளி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி.. ஆஸி அசத்தல் வெற்றி
“அதே சமயத்தில் கில் ஒரு செஷன் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி விட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் நிலைமை சாதகமாக இல்லாத பொழுது அதற்கு ஏற்ற பீல்ட் செட்டப்பை வைத்து பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். தற்போது கேப்டன் கில்லுக்கு ஆதரவாக இந்திய அணி நிர்வாகம் இருக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.