16 ஓவர்.. 2 சதங்கள்.. 37 பந்து டிம் டேவிட் சூறாவளி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி.. ஆஸி அசத்தல் வெற்றி

0
256
David

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டிம் டேவிட் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா அணி வென்று இருந்தது.

- Advertisement -

சாய் ஹோப் அசத்தல் சதம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் சிறப்பாக விளையாடிய கேப்டன் சாய் ஹோப் 57 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 102 ரன்கள் குவித்தார்.

இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரண்டன் கிங் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

- Advertisement -

டிம் டேவிட் மிரட்டல் அடி

இதைத் தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஸ் 19 பந்தில் 22 ரன், கிளன் மேக்ஸ்வெல் 7 பந்தில் 20 ரன், ஜோஸ் இங்லீஷ் 6 பந்தில் 15 ரன், கேமரூன் கிரீன் 14 பந்தில் 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதனால் ஆஸ்திரேலியா அணி நெருக்கடியில் சிக்கியது.

இதையும் படிங்க : பும்ராவை நினைச்சா சங்கடமா இருக்கு.. ஆனா அவரோட அந்த விஷயத்தை ஏத்துக்கிட்டுதான் ஆகணும் – சஞ்சய் மஞ்சுரேக்கர்

இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது ஆக வந்த டிம் டேவிட் ஒரு முனையில் தனியாக அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். வெறும் 37 பந்துகளை சந்தித்த அவர் ஆறு பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் உடன் 102 ரன் குவித்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 215 ரன்கள் இலக்கை வெறும் 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று இருந்ததால், இந்த போட்டியையும் வென்றதால் தொடரையும் வென்றது.

- Advertisement -