உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2025.. ஆஸி, தென்னாப்பிரிக்கா அணி விவரம்.. எந்த ஆன்லைன், சேனலில் பார்ப்பது?

0
185

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா அணிகள் பல பரீட்சை நடத்துகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் மொத்தமாக நடைபெறும் போட்டிகளில் பெரும் வெற்றியை அடிப்படையாக வைத்து புள்ளிகள் வழங்கப்படும்.

இதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி பைனலுக்கு முன்னேறும். இதுவரை நடைபெற்ற மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்தியா இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு சென்றது. இந்த சூழலில் மூன்றாவது முறையும் இந்தியாவுக்கு ஃபைனல் வாய்ப்பு இருந்த நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடைந்த தோல்வி காரணமாக இந்த வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

எந்த சேனலில் பார்க்கலாம்:

இதனால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை நாளை முதல் தொடங்குகிறது. 5 நாள் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்கும்.

லண்டன் வானிலை அடிக்கடி மாறும். மழையால் போட்டிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக கூடுதலாக ஒரு நாள் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஐந்து நாட்களில் மழையால் அல்லது மாநில காரணமாக போட்டியின் நிறுத்தப்பட்டால் அதற்கான நேரத்தை ஆறாவது நாளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் இல் நேரலையில் காணலாம்.

- Advertisement -

அணிகள் விவரம்:

ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குனிமேன், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
ரிசர்வ்: பிரெண்டன் டாகெட்

இதையும் படிங்க: 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் ஓய்வு.. அழிவு பாதையில் கிரிக்கெட்

தென்னாப்பிரிக்கா அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கார்பின் போஷ், டோனி டி சோர்சி, மார்கோ ஜான்சன், கேஷவ் மஹாராஜ், ஆய்டன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முதுசாமி, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன்

- Advertisement -