இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தனது பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளியிட்டிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்திய டெஸ்டனி இளம் அணியாக இருப்பதால் எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் நிலவுகிறது.
ரவி சாஸ்திரியின் பேட்டிங் யூனிட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இருப்பார்கள் எனவும், கே எல் ராகுல் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பு என்றும் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். மேலும் மூன்றாவது இடத்தில் இளம் வீரர் சாய் சுதர்சனை அவரது திறமையின் காரணமாக விளையாட வைப்பேன் என்றும், நான்காவது இடத்தில் கேப்டன் கில் களமிறங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்ததின் மூலம் வாய்ப்பு பெற்று இருக்கும் கருண் நாயர் ஐந்தாவது இடத்தில் களமிறங்குவது சரியாக இருக்கும் என்றும், அவரைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் இந்த முறை ரிஷப் பண்ட் வர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆறு பவுலர்கள்
மேலும் தன்னுடைய பௌலிங் யூனிட்டில் குல்தீப் யாதவுக்கு இடம் கிடையாது எனவும், ஒரே ஒரு ஸ்பின்னர் ஆக பேட்டிங் ஆல் ரவுண்டர் ஜடேஜாவை வைத்துக் கொள்வதாகவும், இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சர்துல் தாக்கூர் அதிக ஓவர்கள் வீச வேண்டியதற்காக இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : என்னால இனி அதை செய்ய முடியாது.. என்கிட்ட எதிர்பார்க்காதீங்க.. பும்ரா சோகமான பேச்சு.. என்ன நடந்தது?
மேலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக பூம்ரா சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா வேண்டுமென்றும், ஒருவேளை முதல் நாளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் வீண் செய்வதற்காக பிரசித் கிருஷ்ணா இடத்தில் அர்ஸ்தீப் இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.






