இந்த வாரம் இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி வருகின்ற ஜூலை இருபதாம் தேதி ஹெட்டிங்லி மைதானத்தில் துவங்குகிறது.
பும்ராவின் பிரச்சனை
ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதுகு பகுதியில் மீண்டும் காயமடைந்தார். இதற்குப் பிறகு அவர் காயம் சரியாகி ஐபிஎல் தொடருக்கு வந்தார். ஆனால் இதுவரையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்தியா இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் இரண்டு நாள் பந்து வீசிய பும்ராவால் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. காயத்திலிருந்து திரும்பிய அவர் பழையபடி செயல்பட முடியாதது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்திய அணிக்கு இது ஒரு பிரச்சினையாக தற்பொழுது மாறி இருக்கிறது.
என்னால் இது முடியாது
தற்போது இது குறித்து பேசி இருக்கும் பும்ரா கூறும் பொழுது ” என்னால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது. தற்போதைக்கு என்னால் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் விளையாட முடியும். என்னால் அந்த அளவிற்கான பணிச்சுமையை மட்டும்தான் இப்போதைக்கு நிர்வகிக்க முடியும். வெளிப்படையாக இது பற்றி அணியில் முடிவு செய்யாவிட்டால் கூட இதுதான் என்னுடைய நிலைமை”
இதையும் படிங்க : கில் ரிசப் பண்ட் உடன் கோலி லண்டன் வீட்டில் ஆலோசனை.. ஓய்வு முடிவு வாபஸ்?.. என்ன நடந்தது?
“நான் ஒரு அவநம்பிக்கை தரும் சூழ்நிலையில் இருக்க விரும்பவில்லை. நான் டெஸ்ட் கனிக்கு கேப்டனாக இருந்தால் மூன்று போட்டியில் மட்டும் தான் விளையாட முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. இது அணிக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்காது. ஒரு வீரராக என்னுடைய சிறந்த நிலையில் இருக்கவும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவும் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






