NO.1 டி20 பவுலர்.. ஆனா என்னை நீக்கிட்டாங்க.. ஜெய்ஸ்வால் காட்டுன வழியில் போறேன் – ரவி பிஸ்னோய் பேட்டி

0
322
Jaiswal

இந்தியாவில் மார்ச் 22 நாளை ஆரம்பிக்கும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாத இறுதியில் முடிவுக்கு வரும். இதற்கு அடுத்து உடனுக்குடன் டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 5ஆம் தேதி துவங்கி உடனே நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் இருந்து வந்து விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் தொடர் இந்த முறை மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏனென்றால் உலகக்கோப்பை நடைபெற இருக்கும் இரண்டு நாடுகளின் சூழ்நிலையும் இந்திய சூழ்நிலையும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடியது. மேலும் ஆடுகளத்தன்மையும் இந்தியாவில் இருப்பது போன்று தான் இருக்கும். எனவே ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்படுவதன் மூலம் தங்களது டி20 உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்ய வீரர்கள் உழைப்பார்கள்.

தற்பொழுது டி20 உலக கோப்பைக்கு இன்னும் இந்திய அணி உறுதி செய்யப்படாத ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் எத்தனை சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள்? யார் இடம் பெறுவார்கள்?என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

நான் பாதுகாப்பற்றவனாக உணரவில்லை

இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், வலதுகை கூக்ளி சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். மேலும் அந்தத் தொடரில் செயல்பட்ட விதத்தில் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. மேலும் 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கடைசிவரையில் அவரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்யவில்லை. பவர் பிளேவில் பந்து வீச முடியும் என்பது இவர் தனிச்சிறப்பாக இருந்தும், இவர் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து ரவி பிஸ்னோய் கூறும்பொழுது “இந்திய அணி நிர்வாகம் என்னை விட்டு வெளியேறியது ஏன் என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. என்னுடைய இரண்டு பயிற்சியாளர்களான பிரத்யோத் சிங் ரத்தோர் மற்றும் ஷாருக் கான் இருவரும் நான் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்தார்கள். ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் சிறந்ததை கொடுக்க அது உதவியது. எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலைகளில் நான் பாதுகாப்பாற்றவனாக அதிர்ஷ்டவசமாக உணரவில்லை. பந்து வீசுவதை அதிகப்படுத்தியதோடு பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினேன்.

இதையும் படிங்க : ஒருமுறை அதுமட்டும் நடக்கட்டும்.. எல்லோரையும் தாண்டி ஆர்சிபி புது வரலாற செட் பண்ணும் – ஏபி.டிவில்லியர்ஸ் பேச்சு

என்னுடன் அண்டர் 19 உலக கோப்பையில் விளையாடிய திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற எல்லோரும் இந்திய அணியில் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் கடுமையாகப் போராடினார்கள். இப்போது ஜெய்ஸ்வால் என்னை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தூண்டி இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.