இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமான முறையில் நாக் அவுட் போட்டிகளில் விளையாடி வென்றது. குறிப்பாக செமி ஃபைனல் மற்றும் பைனலில் 250க்கும் மேற்பட்ட ரன்கள் தொடர்ந்து எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தோல்விக்கு காரணம்
2026 டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் பர்கான் இருக்கிறார். மேலும் அவரே ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவராகவும் இருக்கிறார். இருந்த போதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு வீரர் மட்டுமே நன்றாக விளையாடுகிறார். மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால், பாகிஸ்தான் அணியால் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க முடியவில்லை.
இந்திய அணி டிஎன்ஏ
இதுகுறித்து ரஷீத் லத்தீப் பேசும்பொழுது “இந்திய அணி இறுதிப் போட்டியில் டாஸ் இழந்த பிறகும் 250 ரன்கள் எடுத்தார்கள். யாராலும் அவர்களை பிடிக்கவே முடியாது. இதை அவர்கள் ஒரே இரவில் செய்து விடவில்லை. கடந்த பத்து வருடங்களாக இதற்காக உழைத்திருக்கிறார்கள். கடைசி ஐசிசி நிகழ்வுகள் மற்றும் ஆசியக் கோப்பைகளை பாருங்கள்”
இதையும் படிங்க : தெ.ஆ முட்டாள்தனமான அணி.. வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்காம இருந்தா இந்தியாவ வெளியே அனுப்பி இருக்கலாம் – மைக்கேல் வாகன் சர்ச்சை பேச்சு
“இந்திய டிஎன்ஏ கோப்பைகளை வெல்வது ஆகும். நமது டிஎன்ஏ நாட் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி வருவது ஆகும். அவர்கள் டிஎன்ஏ இறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெறுவதாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.






