நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முட்டாள்தனமான அணி என்றால் அது தென் ஆப்பிரிக்க அணிதான் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரை இறுதிக்கு முன்னேறி வந்து நியூசிலாந்து அணி இடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது.
சிக்கிய இந்தியா
இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே அடுத்து ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வே அணியை வென்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்க முடியும். இதன் மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தால் அவர்களும் அரையிறுதிக்கு வந்திருப்பார்கள் இந்தியா வெளியேறியிருக்கும்.
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது “இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முட்டாள்தனமான அணி என்றால் நான் தென் ஆப்பிரிக்கா அணியை சொல்வேன். அவர்கள் மட்டும் இரண்டாவது சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல விட்டிருந்தால், தானாகவே இந்திய அணி வெளியேறியிருக்கும். இதைச் செய்திருந்தால் இந்தியா போல வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு அணியின் பயணம் அங்கேயே நின்றிருக்கும்”
இதைச் செய்திருக்கலாம்
” தென் ஆப்பிரிக்கா இப்படி செய்யாமல் விட்ட காரணத்தினால் இந்திய அணியின் பயணம் தொடர்ந்தது. அவர்கள் அடுத்தடுத்து ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என வென்று இறுதிப் போட்டிக்கு வந்து விட்டார்கள். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விளையாடியது. அந்த போட்டி அவர்களுக்கு சாதாரணமாக இருந்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்திருக்கலாம்”
இதையும் படிங்க : விராட் ரோஹித்தை வைத்து.. வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐக்கு தரும் வித்தியாச அழுத்தம் – வெளியான செய்திகள்
“இது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்று கிடையாது. இப்படி பெரும்பாலும் நடக்காதுதான். ஆனால் நீங்கள் ஒரு வலிமையான அணியை முன்கூட்டியே வெளியே அனுப்பாமல் உலகக் கோப்பையை வெல்வது என்பது கடினமானது. தென் ஆப்பிரிக்கா இந்த வாய்ப்பை தவற விட்டு விட்டது”






