உலக கிரிக்கெட்

உண்மைய சொல்றேன்.. எங்க வாசிம் அக்ரமை விட ரஷீத் கான் பெரிய வீரர்.. காரணம் இதான் – ரஷீத் லத்திப் பேட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெஜெண்ட் வாசிம் அக்ரமை விட ஆப்கானிஸ்தான் அணியின் தற்போதைய ரஷீத் கான் மிகவும் பெரிய வீரர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் பரபரப்பான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிக அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி கடைசியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி போனது. இதற்கு வட்டியும் முதலுமாக 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆசியாவின் நம்பகமான அணி

தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஆசியாவில் இந்தியாவிற்கு அடுத்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நம்பிக்கையான அணியாக உருவாகி இருக்கிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இந்த வடிவத்தில் பெரிய சவாலை கொடுக்கக்கூடிய அணியாகவும் முக்கிய தொடர்களில் வீழ்த்தக்கூடிய அணியாகவும் மாறியிருக்கிறது.

மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை முன்னுக்கு கொண்டு வந்தவர்களில் மூத்த வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் முகமது நபி மற்றும் ரஷித் கான் இருவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. குறிப்பாக ரஷித் கான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை மட்டும் இல்லாமல் அந்த நாட்டையே பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு சிறந்த நட்சத்திர வீரராக உருவெடுத்திருக்கிறார்.

- Advertisement -

ரஷித் கான்தான் பெரிய வீரர்

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறும் பொழுது “ரஷித் கான் உலக வரைபடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டையே வெளியில் காட்டி இருக்கிறார். அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கு அவர் உதவி செய்திருக்கிறார். இதை சொல்வதற்கு எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது ஆனாலும் சொல்கிறேன், பாகிஸ்தானின் வாசிம் அக்ரமை விட ரஷித் கான் பெரிய வீரராக இருக்கிறார்”

இதையும் படிங்க : ஐபிஎல் சாதனை வீரரை தூக்கிய மும்பை இந்தியன்ஸ்.. வருகிறார் பவர்பிளே கில்லாடி.. புதிய தகவல்

“நான் அவருக்கு சொல்வதற்கு ஒரே ஒரு மிக முக்கியமான அறிவுரை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அவர் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அணியை உருவாக்கி, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by