தற்போது உலகக் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக மாறி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரின் வருமானம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த இடத்தில் தவறு செய்தது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசித் லத்தீப் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமம் உலக அளவில் இரண்டாவது பெரிய விலைக்கு விற்கப்பட்ட விளையாட்டு தொடராக இருக்கிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி வருகிறது. இதனால் இந்தியா உலகக் கிரிக்கெட்டின் மையமாக மாறி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் அதன் வளர்ச்சி குறித்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கிறது. வீரர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டி இருக்கிறது. மேலும் தொடரை சுவாரசியப்படுத்த சில புதிய விதிமுறைகளையும் கொண்டு வருவதை செய்து கொண்டே இருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறும் பொழுது “இந்தியா அவர்களின் திரைப்படத்துறையைப் போலவே கிரிக்கெட்டையும் உருவாக்கியது. ஆனால் நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொழுதுபோக்காக பார்க்கிறோம். இதனால் எங்களால் வணிகரீதியாக வெற்றி பெறவே முடியவில்லை. பிஎஸ்எல் லீக் எந்த இடத்தில் தொடங்கியதோ அங்கேயே நிற்கிறது.இப்பொழுது வரை 1.40 லட்சம்தான் வீரரின் அதிகபட்ச சம்பளமாக இருக்கிறது.
ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இதை மேலே தள்ளி எடுத்துச் செல்ல முடியவில்லை? மிட்சல் ஸ்டார்க் மற்றும் பாட் தம்மின்ஸ் போன்ற வீரர்களை ஏன் இங்கே கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால் எங்களிடம் முதலீடு செய்வதற்கு பணம் இல்லை. இதன் காரணமாக எங்களுக்கு வியாபாரமும் இல்லை.
இதையும் படிங்க : பும்ராவுக்கு குட் நியூஸ்.. 157 கி.மீ மயங்க் யாதவ் அவரே கொடுத்த மாஸ் அப்டேட்.. இனி அசைக்கவே முடியாது
இந்தியா இந்த உலகக் கோப்பைக்கு பிறகுதான் பெரிய அணியாக மாறியது என்று கிடையாது. 2007, 2011 மற்றும் 2015 என அவர்கள் தொடர்ச்சியாக வெளிநாட்டு சிறந்த பயிற்சியாளர்களிடமிருந்து நல்ல அனுபவத்தை பெற்றார்கள். தற்பொழுது ஐபிஎல் தொடர் வந்த பிறகு ரிக்கி பாண்டிங், பிராவோ, மைக் ஹசி போன்ற சிறந்த முன்னாள் வீரர்களின் அனுபவத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் அடிமட்டம் வரையில் வேலை செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






