நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் அவுட் அப்பீலை இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் வாபஸ் வாங்கியது குறித்து ரகானே பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் யுஏஇ வீரர் ஜுனைட் சித்திக் பந்தை விளையாடச் சென்று தவறவிட, சஞ்சு சாம்சன் பந்தைப் பிடித்து ஸ்டெம்பில் அடித்தார். அப்போது பேட்ஸ்மேன் கிரீசுக்கு வெளியில் இருந்ததால் அவுட் என தெளிவாக தெரிந்தது. இருந்த போதிலும் அந்த அவுட் வேண்டாம் என சூரியகுமார் யாதவ் மறுத்துவிட்டார். குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட் என்றால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரகானே பேசும் பொழுது “இது இந்திய அணி மற்றும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவியின் சிறந்த முடிவு. ஏனென்றால் அப்போது ஜுனைட் சித்திக் ரன் எதுவும் ஓட முயற்சி செய்யவில்லை. மேலும் அவருக்கு கிரீஸ் எங்கு உள்ளது என்பது குறித்தும் ஐடியா எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்”
“ஒரு ஃபீல்டராகவோ விக்கெட் கீப்பராகவோ பந்து உங்கள் கையில் கிடைத்தால் நீங்கள் ஸ்டெம்ப்பை நோக்கி குறி வைக்க வேண்டும் என்பது உங்களுடைய உள்ளுணர்வு. ஆனாலும் இந்திய அணி எடுத்த முடிவு மிகவும் நியாயமானது. அவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான குணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் நீங்கள் பார்க்க விரும்புவது இதைத்தான். நீங்கள் கடினமாக விளையாடுங்கள் ஆனால் நியாயமாக விளையாடுங்கள்”
மேலும் பேசிய ரகானே கூறும்போது “தனிப்பட்ட முறையில் தற்போதைய இந்திய அணி மிகவும் சமநிலையான அணி என்று நான் நினைக்கிறேன். தற்போது இந்த அணியில் விடுபட்டுள்ள ஒரே வீரர் அர்ஸ்தீப் சிங் மட்டுமே. அவர் பும்ராவுடன் இணைந்து பந்து வீசுவதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்”
இதையும் படிங்க : இந்திய அணியில் ஏதோ தவறு இருக்குனு அர்த்தம்.. பாகிஸ்தான் கூட இது மட்டும் நடக்கக்கூடாது – அபிஷேக் நாயர் பேட்டி
“தரமான அணிகளுக்கு எதிராக தரமான ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் தேவை. பவர் பிளேவில் ஹர்திக் பாண்டியா வந்து வீசினால் இறுதிக்கட்டத்தில் பும்ரா உடன் இணைந்து பந்து வீச ஒருவர் தேவை. அந்த வேலைக்கு அர்ஸ்தீப் சிங் மிகவும் சரியானவர். அவர் நிச்சயம் இந்த தொடரில் விளையாடுவார் என்று நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.