நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடையாது என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இந்த போட்டி வரும் ஞாயிறு செப்டம்பர் 14ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தியா போட்டியாளர் இல்லை
இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “நான் இந்திய அணியை இந்த தொடரில் போட்டியாளர் என்று சொல்ல மாட்டேன். அவர்கள் டி20 வடிவத்தில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று வந்திருக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் அணி மற்றும் அவர்கள் விளையாடும் விதத்திற்கு அவர்கள் பாகிஸ்தான் அணியை தோற்கடிக்க வேண்டும். ஒருவேளை இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றால் அவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம்”
“எங்கள் அணியில் உள்ள பலம் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய விதம், இதை வைத்து பார்க்கும் பொழுது தாங்கள் சிறப்பாக செயல்பட்டால் தொடரை வெல்வது மிகவும் சாதாரண விஷயம். இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்தியாவின் போட்டியாகவே இருக்கும்”
பரிசோதனை செய்ய வேண்டும்
“நீங்கள் இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் அப்படி நடக்கக் கூடாது. ஏனென்றால் எதை செய்தால் கடினமாக இருக்குமோ இந்திய அணி அதை செய்ய வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை ஒரு பரிசோதனையாக பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க : இந்தியாவை விட.. எங்க ஸ்பின்னர்தான் பெஸ்ட்.. 5 பேர வச்சு அலற விடுவோம் – பாக் கோச் சவால் பேச்சு
“கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் போட்டியை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லாமல் நம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிய சவால் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அது நாம் மேற்கொண்டு தயாராக அதற்கு உதவியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






