“ரஷித் கான் ஹீரோ கிடையாது.. ஹீரோவின் அண்ணன்!” – இர்ஃபான் பதான் வித்தியாசமான கருத்து!

0
418
Rashid

ஆப்கானிஸ்தான் அணி நேற்று தனது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான போட்டியை வென்றது. உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை வென்று, நடப்பு உலகக்கோப்பை அரை இறுதி வாய்ப்புக்கு பல கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.

நேற்றைய போட்டி இங்கிலாந்து அணிக்கு மூன்றாவது போட்டியாக இந்த உலகக் கோப்பை தொடரில் அமைந்தது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோற்று இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்ததின் மூலமாக, அடுத்து பெரிய அணிகளுடன் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற்றதாக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மிகக் குறிப்பாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகளை இங்கிலாந்து வெல்ல வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கு இன்னொரு பக்கத்தில் தென் ஆப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன. எனவே இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது மிக எளிதான ஒன்றாக இந்த முறை இருக்காது. கடந்த முறையும் இங்கிலாந்து கடைசி மூன்று போட்டிகளை வென்றால் மட்டுமே அரையிறுதி என்கின்ற சூழ்நிலையிலேயே அரையிறுதிக்கு வந்து கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் ஏற்படுத்தியிருந்தார். அதேபோல் பந்துவீச்சில் பவர் பிளே மற்றும் அதற்குப் பிறகான ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர் முஜிப் உர் ரஹ்மான் ஏற்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறும்பொழுது “சிறந்த பழிவாங்கல். நேற்று ரஷித் கானுக்கு டெல்லி பத்லாபூர் ஆனது. இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் விட்டுத் தந்தவராக ரஷித் இருந்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு சிறந்த சாதனைகள் இல்லை என்று நாம் கூறினோம். ஆனாலும் அவரை போட்டியிலிருந்து விலக்க முடியாது.

எஞ்சிய பந்துவீச்சாளர்கள் முக்கிய வேலையை செய்தார்கள். ரஷித் கான் அழுத்தத்தை வெளியிட விடவில்லை. மேலும் சிறப்பாகவும் பேட்டிங் செய்தார். நேற்றைய போட்டியின் உண்மையான ஹீரோக்கள் குர்பாஸ் மற்றும் முஜீப். ரஷித் ஹீரோ இல்லையா என்றால் அவர் ஹீரோவின் சகோதரனாக இருந்தார்.

ஒரு பெரிய போட்டியை தனியாளாக வெல்லக்கூடிய லிவிங்ஸ்டன் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். அதற்குப் பிறகு ஆதில் ரசித் மற்றும் கடைசி விக்கெட்டை அவர்களைப் பற்றி. அதற்குள் போட்டி ஆப்கானிஸ்தான் கைகளுக்குள் வந்திருந்தது!” என்று கூறி இருக்கிறார்.