ரஞ்சி டிராபி 2024.. 8.40 கோடிக்கு சிஎஸ்கே வாங்கிய இளம் வீரர் அதிரடி.. மாறும் டெஸ்ட் கிரிக்கெட்!

0
2106
Rizvi

இந்த வருடம் ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் சாம்பியன் அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அம்பதி ராயுடுவின் இடத்திற்கு சரியான வீரர் தேவைப்பட்டது. மேலும் அவர்களுக்கு ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் அந்த இடத்திற்கு பலரும் பலவிதமாக நினைத்து இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பாராத வகையில் சில வீரர்களை வாங்கி, ஏலத்தில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த வகையில் அம்பதி ராயுடு இடத்துக்கு வெளிநாட்டு வீரரான நியூசிலாந்தின் டேரில் மிட்சல், அதே சமயத்தில் இந்திய உள்நாட்டு இளம் வீரர் சமீர் ரிஸ்வி என இருவரை வாங்கி ஆச்சரியப்படுத்தியது.

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களை வாங்குவதில் தான் எப்பொழுதும் பெரிய ஆர்வத்தை காட்டும். ஆனால் இந்த முறை ஏலத்தில் இந்திய உள்நாட்டு இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு 8.40 கோடி கொடுத்து வாங்கி ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

20 வயதான இந்த வலது கை பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடுவதை தன்னுடைய அணுகுமுறையாக வைத்திருக்கிறார். இவர் உத்திரபிரதேச மாநில அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை வலது கை சுரேஷ் ரெய்னா என்கிறார்கள். சுரேஷ் ரெய்னாவும் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று துவங்கிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபியில் கேரளா அணிக்கு எதிராக உத்தர பிரதேச அணி விளையாடியது. இந்த போட்டியில் ஐந்தாவது வீரராக உத்தர பிரதேச அணிக்கு சமீர் ரிஸ்வி களம் இறங்கினார்.

உள்ளே வந்த ரிஸ்வி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். மொத்தம் 18 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்துவிட்டார். ஆனால் அவர் ஆட்டத்தை அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது.

இன்று ரஞ்சி டிராபியில் அவர் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருந்தால் கூட, அவர் விளையாடிய விதத்தால் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்பது நிச்சயம்!