ரஞ்சி டிராபி 2024.. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கில்லி.. ரிங்கு சிங் அபார ஆட்டம்.. உத்தரபிரதேஷ் மீண்டது!

0
833
Rinkusingh

தற்போது இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக நிறைய இளம் வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி கிடைக்கக்கூடிய இளம்வீரர்களில் நிறைய வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள்.

இந்த வகையில் திலக் வர்மா, சாய் சுதர்ஷன், ஜெய்ஸ்வால் வரிசையில் ரிங்கு சிங் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். ஏனென்றால் இவர் போட்டியில் ஆட்டத்தை முடிக்கும் ஃபினிஷிங் இடத்திற்கு பேட்டிங் செய்ய வருகிறார்.

- Advertisement -

ஒரு அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடமாக இவரது இடம் இருப்பதால், இவருக்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது. மேலும் இப்படி கடினமான இடத்தில் வந்தாலும் கூட அதற்கேற்ற போல் விளையாடுவதில் சிறந்தவராக இருக்கிறார். மேலும் மிகவும் பொறுமையான உடல் மொழி உடன் பதட்டம் இல்லாமல் ஆட்டத்தை அடக்குகிறார்.

இந்திய அணியின் தற்போதையத்தின் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணியில் அறிமுகமாகிவிட்டார். தற்பொழுது இந்திய டெஸ்ட் அணிகள் மட்டுமே இவரது இடம் எஞ்சி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று துவங்கிய இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியில் கேரளா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேஷ் அணி ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி கொண்டு இருந்தது.

அப்போது ஆறாவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்த ரிங்கு சிங் துருவ் வல் உடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து உத்தரப் பிரதேச அணியை தற்பொழுது ஒரு அளவுக்கு சிறப்பான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 103 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தும், துருவ் ஜுரல் ஆட்டமிழக்காமல் 100 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தும் களத்தில் நிற்கிறார்கள்.

தற்பொழுது உத்தர பிரதேச அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருக்கிறது. கொஞ்சம் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 300 ரன்கள் உத்தரப்பிரதேச அணி எட்டும்பொழுது, இந்த போட்டியில் அவர்கள் முன்னிலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!