சர்வதேச இரட்டை சதம் அடித்த அடுத்து ரஞ்சியில் சதம் ; இசான் கிசான் அதிரடி!

0
1896
Ishankishan

இந்திய உள்நாட்டு போட்டி தொடர்களில் முக்கியமானது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியாகும் . இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுகிறது . மேலும் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இதுவே முதன்மையான அளவுகோல் ஆகும் . 2022-23 ஆண்டிற்கான ரஞ்சி சீசன் டிசம்பர் 13ஆம் தேதி அன்று துவங்கியது ..

மொத்தமாக 32 எலைட் அணிகளும் 6 பிளேட் அணிகளும் கலந்து கொள்ளும் இந்த ரஞ்சி தொடரானது டிசம்பர் 13ஆம் தேதி துவங்கி பிப்ரவரி மாதம் 20ம் தேதி முடிவடைய இருக்கிறது. மொத்தம் 135 போட்டிகளைக் கொண்ட இந்த ரஞ்சித் தொடரில் அணிகள் நாலு எலைட் பிரிவுகளாகவும் ஒரு பிளேட் குரூப்பாகவும் பிரிக்கப்பட்டுள்ளன .

- Advertisement -

இந்த சீசனுக்கான ரஞ்சிப் போட்டியில் இந்திய அணியின் வருங்கால வீரர்கள் விளையாடுவதால் இந்த தொடருக்கான சுவாரசியம் அதிகரித்துள்ளது சஞ்சு சாம்சன்,இசான் கிசான், ருத்ராஜ் கேய்க்வாட் சர்ப்ராஸ் கான், யாஷ் துல், ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களும் மாயன் அகர்வால்,மனிஷ் பாண்டே ரிஷி தவான், விஜய் சங்கர் போன்ற அனுபவ வீரர்கள் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது .

ரஞ்சித் போட்டிகளின் மூன்றாம் நாளான இன்று ஜார்க்கண்ட் மற்றும் கேரளா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனும் ஜார்க்கண்ட் அணியின் நட்சத்திர வீரருமான இசான் கிசான் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் முதல் ஆடிய கேரள அணி 475 ரன்கள் எடுத்தது. கேரள அணியின் அக்ஷய் சந்திரன் 150 ரண்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் 72 ரன்களும் எடுத்தனர் . இதனை அடுத்து களம் இறங்கிய ஜார்க்கண்ட் அணி 114 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது சவுரப் திவாரியுடன் ஜோடி சேர்ந்த இசான் கிசான் அபாரமாக அடி சதம் அடித்தார் . இவர் 195 பந்துகளில் 132 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதில் ஒன்பது பௌண்டரிகளும் எட்டு சிக்ஸர்களும் அடங்கும் .

- Advertisement -

இசான் கிசான் கடந்த பத்தாம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் அசுர வேகத்தில் ஆடிய இசான் கிசான் இன்றைய போட்டியில் நிதானமாக அணியின் சூழலுக்கு ஏற்றவாறு ஆடி இருப்பது அவர் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் தனக்கான இடத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை காட்டுகிறது .