பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தான் இருந்த பொழுது ஆடுகள விவகாரத்தில் கேப்டன் பாபர் அசாம் சொன்னதையே செய்ததாக ரமீஷ் ராஜா தற்பொழுது ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ரமீஷ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த பொழுது பாகிஸ்தான் அணிக்கு அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக பாபர் ஆசான் இருந்தார். இவர்களுடைய கூட்டணி காலத்தில்தான் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக முதல் உலகக் கோப்பை வெற்றியை பாகிஸ்தான அணி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரிய கிரிக்கெட் அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பாதுகாப்பு காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு நீண்ட காலம் கிரிக்கெட் சுற்றும் பயணம் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் பாபர் அசாம் கேப்டனாக இருந்த பொழுது இரண்டு பெரிய அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய சம்மதித்தனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கு அமைக்கப்பட்ட ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமாக இருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இல்லை. முழுக்க தார் ரோடு போல இருந்தது. இது குறித்து உலக கிரிக்கெட்டில் அப்பொழுது நிறைய விமர்சனங்கள் எழுந்திருந்தது.
இது குறித்து அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கூறும் பொழுது “நான் உண்மையில் ஆடுகளத்தை தயாரிப்பில் எதிலும் தலையிடவில்லை. கேப்டன் பாபர் அசாம் சொல்வதை மட்டுமே நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவர் என் அறைக்குள் வந்ததும் என்ன திட்டங்கள் இருக்கிறது என்று கேட்டேன். அவர் சில வியூகங்களை என்னிடம் கூறினார். நான் அதில் சில கேள்விகளையும் எழுப்பினேன். ஆனால் நாள் முடிவில் முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் கேப்டனாக அவரே இருந்தார்”
இதையும் படிங்க : பும்ராவுக்கு புது பிரச்சனை வந்திருச்சு.. ஆஸி போறதுக்கு முன்ன இதை சரி செய்யுங்க – பாக் பசித் அலி அட்வைஸ்
“உங்களுக்கு ஒரு ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று தெரியாத பொழுது அங்கு யூகிக்க முடியாத காரணத்தினால் போட்டி உண்டாகிறது. ஆடுகளம் உங்கள் விருப்பத்திற்கு இல்லை என்றால் நீங்கள் உங்களுக்கான திட்டத்தை அமைக்க முடியாது. பாகிஸ்தான் தங்களுடைய திறமைக்கு தகுந்த ஆடுகளங்களை தேர்ந்தெடுக்காததுதான் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம்” என்று கூறியிருக்கிறார்.