பும்ராவுக்கு புது பிரச்சனை வந்திருச்சு.. ஆஸி போறதுக்கு முன்ன இதை சரி செய்யுங்க – பாக் பசித் அலி அட்வைஸ்

0
47
Basit

ஆஸ்திரேலியா தொடருக்கு செல்வதற்கு முன்பாக தற்போது பும்ராவுக்கு புதிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் பும்ரா தொடர்ந்து எட்டு ஓவர்கள் பந்து வீசினார். அணிக்கு விக்கெட் தேவைப்பட்ட நேரத்தில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்ததால் அவர் இவ்வளவு நீண்ட ஸ்பெல் வீச வேண்டி இருந்தது. அதில் இரண்டு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

எல்லா விரல்களும் கேஎல்.ராகுலை நோக்கி

இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் திரும்பி வருமா என்றால் நிச்சயம் நான் சொல்வேன் என்று திரும்பி வரும். பாகிஸ்தான அணி உள்நாட்டில் மூன்று வருடம் எட்டு மாதங்கள் கழித்து திரும்பி வந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்திய அணி வேறு 3 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே தோற்று இருக்கிறது. மேலும் அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. எனவே இந்திய அணி திரும்பி வரும்”

“நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எனில் தோல்வி காரணமாக அனைத்து விரல்களும் கேஎல்.ராகுலை நோக்கியே திரும்பும். இதை கம்பீர் எப்படி எதிர்கொள்கிறார் என்று பார்க்க வேண்டும் ஆனால் ராகுல் டிராவிட் மிகச் சிறப்பாக எதிர் கொண்டு இருந்தார். மேலும் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக கம்பீருக்கு இது ஒரு சிறந்த கண் திறப்பாக அமைந்திருக்கும்”

- Advertisement -

பும்ராவின் புதிய பிரச்சனை

“நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 ஓவர்கள் தொடர்ந்து உம்ரா பந்த வீசிய பொழுது எனக்கு வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் நினைவுக்கு வந்தார்கள். ஆனால் அவருக்கு எதிர்முனையில் இருந்து சிறப்பான ஒத்துழைப்பு தருவதற்கான வேகப்பந்துவீச்சாளராக சிராஜ் இருக்கவில்லை. தற்போது இதுதான் பும்ராவுக்கு புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது”

இதையும் படிங்க : 578 ரன்ஸ்க்கு.. திருப்பி பதிலடி தந்த புஜாரா.. லாராவின் மெகா சாதனையை முறியடித்தார் – ரஞ்சி டிராபி 2024

“இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக முகமத் சமி உடல் தகுதி பெற்று மீண்டும் திரும்பி வர வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பும்ராவுடன் இணைந்து பந்து வீசுவதற்கு, இந்தியாவிற்கு தற்போது ஒரு சரியான வேகப்பந்துவீச்சாளர் தேவை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -