இந்திய அணிக்கு இனி ரஸல் நான்தான்.. அவரே எனக்கு தனியா இதையெல்லாம் செஞ்சிருக்கார் – ரமன்தீப் சிங் பேட்டி

0
412
Russell

தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணிகள் தேர்வாகி இருக்கும் மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரமன்தீப் சிங் கொல்கத்தா அணியில் ஆண்ட்ரூ ரசல் மற்றும் கவுதம் கம்பீர் தனக்கு எப்படி உதவினார்கள் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

தற்போது ஓமன் நாட்டில் நடந்து முடிந்த வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணிகள் இடம் பிடித்து பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தால். இதன் காரணமாக தற்போது இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

ரஸல் தந்த பயிற்சி

இதுகுறித்து ரமன்தீப் சிங் கூறும் பொழுது “கம்பீர் சார் எனக்கு 30 நிமிடம் ரேஞ்ச் ஹிட்டிங் ஷார்ட் விளையாடுவதற்கான பயிற்சியை அமைத்துக் கொடுத்தார். அந்த நேரத்தில் என்னுடன் ஆண்ட்ரூ ரஸல் உடனிருந்து நான் விளையாடும் முறையை கவனித்தார். ஐபிஎல் தொடரில் அவர் எனக்கு கொடுத்த நுண்ணறிவுகள் பேட்டிங்கில் உதவி செய்கிறது”

“ரசல் மிகவும் வலிமையானவர். அதே சமயத்தில் அவர் பேட்டிங்கில் அடிப்படைகளையும் பின்பற்றுகிறார். அவருக்கு ஷாட் விளையாடும் பொழுது தலை நிலையாகவும், கைகள் நன்றாகவும் ஸ்விங் ஆகிறது. இந்த அடிப்படைகளால்தான் அவரால் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி எல்லைக்கு வெளியே அடிக்க முடிகிறது”

- Advertisement -

எனக்கு உன்னைதான் பிடிக்கும்

“கம்பீர் சார் என்னிடம் இந்த அணியில் உன்னை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுதும் அவர் எனக்கு ஆதரவாக இருப்பார் எனவும், எனவே நான் எந்தவித பயமும் இல்லாமல் விளையாட வேண்டும் என்று கூறினார். நானும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை அப்படியே விளையாடினேன்”

இதையும் படிங்க : 142 பந்துகள்.. பேட்டிங்கில் மாஸ் காட்டிய யுஸ்வேந்திர சாஹல்.. இந்திய அணியின் தேர்வு குழுவுக்கு மெசேஜ்

“என்னிடம் கொல்கத்தா அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது குறித்து எனக்கு தெளிவான ரோல் கொடுக்கப்பட்டு விட்டது. எனக்கு எல்லா பக்கத்தில் இருந்து ஆதரவும் தெளிவும் கிடைத்த காரணத்தினால், நான் எல்லோரையும் ஈர்ப்பதற்கு அசாதாரணமான முறையில் விளையாட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -