நமீபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பஞ்சாப் அணி அதிகாரப்பூர்வமற்ற ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி நமீபியாவின் இன்னிங்சை மாலன் க்ரூகர் மற்றும் ஜான் பால்ட் ஆகியோர் தொடங்கினார்கள். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் விரைவாக சித்தார்த் கவுல் வீழ்த்தினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய மைக்கேல் வான் லிங்கன் 45 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் குவித்து சன்வீர் சிங்கின் பந்துவீச்சில் வெளியே, அதற்குப் பிறகு நமீபியாவின் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேற ஆரம்பித்தனர். இதனால் நமீபியா அணி இறுதியாக 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் கலக்கிய மயங்க் மார்க்கண்டே ஏழு ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் சன்வீர் சிங் இரண்டு விக்கெட்டுகளும் சித்தார்த் கவுல் இரண்டு விக்கெட்களும், வீழ்த்த, ரமன்தீப் சிங், ஜேசுந்தர் சிங் மற்றும் சுக்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்குப் பிறகு பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஐபிஎல் நட்சத்திரங்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் அன்மோல் பிரீத் சிங் ஆகியோர் நமீபியாவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். அதிரடியாக விளையாடிய பிரபு சிம்ரன் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என விலாசி 179 ஸ்ட்ரைக் ரேட்டில் 88 ரன்கள் குவித்தார்.
மற்றொரு பேட்ஸ்மேன் அன்மோல் பிரீத் சிங் 36 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் கூட இழக்காமல் இவர்கள் இருவருமே விளையாடி பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 14 ஓவர்களில் 149 ரன்கள் குவித்து பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது போட்டியிலும் தனது வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க:பாபர் அசாம் விவகாரம்.. ஹர்பஜன்சிங் மன்னிப்பு கேட்டுட்டார்.. இனி அதை பெரிது படுத்தாதீங்க- கம்ரான் அக்மல் பேட்டி
88 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்த பிரபு சிம்ரன் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. மேலும் இரண்டு ஒரு நாள் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.






