ஆர்சிபி அணிக்கு.. யாரும் எதிர்பார்க்காத புதிய கேப்டன்.. விராட் கோலி வாழ்த்து.. வெளியான தகவல்கள்

0
987
Rajat

ஐபிஎல் தொடரில் பிரபலமான ஆர்சிபி அணி தங்களின் புதிய கேப்டனை அறிவித்திருக்கிறது. விராட் கோலி புதிய கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த அணி நிர்வாகம் அதிரடியான முடிவு எடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஆர்சிபி அணிக்கு நீண்ட காலமாக விராட் கோலி கேப்டன் ஆக இருந்து வந்தார். இதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனான பாப் டு பிளேசிஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். நடந்து முடிந்த மெகா ஏலத்தில் அவரை மீண்டும் ஆர்சிபி அணி நிர்வாகம் தக்கவைக்காததால் புதிய தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

- Advertisement -

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன்

இந்த நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று பகல் 11 மணிக்கு தங்களின் புதிய கேப்டன் யார் என்று அறிவிப்போம் என கூறியிருந்தது. எனவே அந்த அணியின் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் அந்த அணியின் புதிய கேப்டன் யார்? விராட் கோலி மீண்டும் கேப்டனாக வருவாரா? என்கின்ற பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தது.

இப்படியான நிலையில் தற்போது அந்த அணியின் புதிய கேப்டனாக இந்திய வீரரும், மத்திய பிரதேஷ் மாநில அணிக்கு இந்த முறை கேப்டன் ஆக செயல்பட்ட வருமான ரஜத் பட்டிதாரை புதிய கேப்டனாக அறிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டு, தற்போது 14 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜத் பட்டிதார், தற்போது அந்த அணியின் கேப்டனாகவும் உயர்ந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி தெரிவித்துள்ள வாழ்த்து

ஆர்சிபி அணியின் இந்த முடிவுக்கு குறித்து பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “ரஜத் பட்டிதார் நீங்கள் இந்த ஆர்சிபி அணியில் வளர்ந்த விதம் மற்றும் நீங்கள் செயல்பட்டு கொண்டு வரும் விதம் மிகவும் சிறப்பானது. நீங்கள் ஒவ்வொரு ஆர்சிபி ரசிகர்களுக்கும் சிறந்ததை உருவாக்கி இருக்கிறீர்கள். எனவே இந்த கேப்டன் பொறுப்புக்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரவி சாஸ்திரி உண்மையை உடைத்துவிட்டார்.. இங்கிலாந்து செஞ்சது மோசமான அவமரியாதை – கெவின் பீட்டர்சன் விமர்சனம்

இதுகுறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவர் பேசும் பொழுது ” ரஜத் மிகவும் எளிமையானவர். அவர் தன்னைச் சுற்றி இருக்கும் வீரர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்ய நினைக்க கூடியவர். மேலும் மத்திய பிரதேசம் அணியை எப்படி வழிநடத்தினார் என்பது குறித்து நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தோம். அவர் செயல்பட்ட விதத்தை நாங்கள் மிகவும் விரும்பினோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -