ரவி சாஸ்திரி உண்மையை உடைத்துவிட்டார்.. இங்கிலாந்து செஞ்சது மோசமான அவமரியாதை – கெவின் பீட்டர்சன் விமர்சனம்

0
1471
Pietersen

இங்கிலாந்து அணி வீரர்கள் செய்த ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ரவி சாஸ்திரி சொன்னது தமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக இந்திய சூழ்நிலையை மிகவும் அவமரியாதையான முறையில் இங்கிலாந்து வீரர்கள் நடத்திவிட்டார்கள் எனவும் கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது ஜோஸ் பட்லர் தலைமையில் இந்தியா வந்த இங்கிலாந்து அணியினர் முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு நான்கு என இழந்தார்கள். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளையும் தோற்று தொடரை இழந்தார்கள். அவர்களுடைய அணுகுமுறை மிகவும் மோசமாக இருந்தது.

- Advertisement -

நானும் ரவி சாஸ்திரியும் பேசினோம்

இது குறித்து பேசி இருக்கும் கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” நானும் ரவி சாஸ்திரியும் மாடியில் இங்கிலாந்து அணி பயிற்சி செய்த விதம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது நாக்பூர் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து ஒரே ஒரு பயிற்சி அமர்வில் மட்டுமே கலந்து கொண்டதாக எனக்குத் தெரிய வந்தது. அதுவும் ஜோ ரூட் மட்டுமே அப்படியான ஒரு பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறார். நீங்கள் இந்திய துணை கண்டத்திற்கு வந்து மதிப்பளிக்காமல் பயிற்சி இல்லாமல் எதையும் செய்ய முடியாது”

“ஒரு கிரிக்கெட் தொடரில் நான் பயிற்சி இல்லாமல் வந்து ரன்கள் அடிப்பேன் என எந்த ஆண் பெண் சொன்னாலும் அது முடியாத காரியம். நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். முதல் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்கு வராததை கேட்டு நான் திகைப்பும் ஆச்சரியமும் அடைந்து போனேன்”

- Advertisement -

இது கோல்ப் சுற்றுப்பயணம் கிடையாது

“நீங்கள் கோல்ப் விளையாடி மகிழ்ச்சியாக இருங்கள். அது எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால் நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்குதான் பணம் கிடைக்கிறது. நீங்கள் அதற்காகத்தான் பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். எனவே நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையானதை செய்ய வேண்டும். இது கோல்ப் சுற்றுப்பயணம் கிடையாது கிரிக்கெட் சுற்றுப்பயணம்”

இதையும் படிங்க : கில்லுக்கு இதை மட்டும் செய்யாதீங்க.. 2 வருஷம் கழிச்சு நடக்கற மேஜிக்கை பாருங்க – கம்பீர் கோரிக்கை

“நான் விளையாடிய காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்காக கொடுக்க வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். அப்படி செய்யக் கூடியவர்கள் மட்டுமே இங்கிலாந்து அணிக்காக விமானம் ஏற வேண்டும். ஆனால் தற்போதைய அணியில் அப்படி விமானம் ஏறக்கூடிய தகுதி யாருக்குமே இல்லை. அவர்கள் இந்திய சூழ்நிலைக்கு கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்கவில்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -