ஜடேஜா மற்றும் ரோஹித் ஷர்மாவை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையைப் படைத்துள்ள இளம் வீரர் ரியான் பராக்

0
130

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் ஃபீல்டிங் விஷயத்தில் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். கடினமான கேட்சுகளை கூட மிக இலகுவாக ஈசியாக எடுக்கிறார். நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சீசனில் 14வது கேட்சை எடுத்தார்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் ஷர்மாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரியான் பராக்

- Advertisement -

2015 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 13 கேட்சுகளை எடுத்திருந்தார். அதேபோல 2012ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் 13 கேட்சுகளை எடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.ஒரு சீசனில் அதிக கேட்சுகளை எடுத்த இந்திய வீரர்கள் மத்தியில் ரவிந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் ஷர்மா இதுநாள் வரையில் முதலிடத்தில் இருந்து வந்தனர்.

ஓவர் ஆல் ரெக்கார்டை எடுத்துப் பார்க்கையில் 2014 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஏபி டிவிலியர்ஸ் ஒரு சீசனில் அதிகபட்சமாக 19 கேட்சுகளை எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

தற்பொழுது லீக் தொடர் முடிவில் நடப்பு சீசனில் 14 கேட்சுகளை எடுத்து இந்திய வீரர்கள் மத்தியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் ஷர்மாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்கு ரியான் பராக் முன்னேறியுள்ளார். இன்னும் ப்ளே ஆப் சுற்று மீதம் இருக்கும் நிலையில், ஒருவரால் ரெக்கார்டு வைத்திருக்கும் ஏபி டிவில்லியர்ஸ்சின் சாதனையையும் அவர் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

அடப் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி இதுவரை பராக் 164 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 143.86 ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.