இந்திய கிரிக்கெட்

சிஎஸ்கேவுக்கு எதிராக சாதனை சேஸிங்.. 15 பந்தில் 15 வயது வைபவ் சூரியவன்சியின் ருத்ரதாண்டவம் – ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

இன்று நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இரண்டு அணியில் இருந்தும் வீரர்கள் பரிமாற்றம் நடந்துள்ள காரணத்தினால் போட்டிக்கு நிறைய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சரிந்து விழுந்த சிஎஸ்கே

இந்த போட்டிக்கு சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சஞ்சு சாம்சன் 7 பந்தில் 6 ரன், கேப்டன் ருதுராஜ் 11 பந்தில் 6 ரன் எடுத்து வெளியேறினார்கள். தொடர்ந்து வந்த ஆயுஷ் மாத்ரே கோல்டன் டக், மேத்யூ ஷார்ட் 2, சிவம் துபே 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து சர்பராஸ் கான் 12 பந்தில் 17 ரன், கார்த்திக் சர்மா 15 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள். கடைசி வரையில் தாக்குப்பிடித்து விளையாடிய ஜேமி ஓவர்டன் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே 19.4 ஓவரில் 127 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பர்கர், ஆர்ச்சர் மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

சூரியவன்சி வெறியாட்டம்

இதை தொடர்ந்து விளையாட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 15 வயதான வைபவ் சூரியவன்சி 15 பந்தில் அரைசதம் அடித்து 17 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த துருவ் ஜுரல் 9 பந்தில் 18 ரன் எடுத்தார்.

இதற்கு அடுத்து ஜெய்ஷ்வால் 36 பந்தில் 38 ரன்கள், கேப்டன் ரியான் பராக் 11 பந்தில் 14 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் 47 பந்துகள் மீதம் வைத்து 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் கடைசி 11 மாதங்களில் 9 முறை சிஎஸ்கேவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று உள்ளது. மேலும் சிஎஸ்கேவுக்கு எதிராக ஒட்டுமொத்த ஐபிஎல் இது 2வது வேகமான சேஸ் ஆகும்.

இதையும் படிங்க : ஷிவம் துபேவை பார்த்து ஜட்டு செய்த காரியம்.. எங்க மேல இவ்வளவு கோபமா ஜட்டு? – சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம்

ஐபிஎல்-லில் சிஎஸ்கே-க்கு எதிரான அதிவேக சேஸிங்:

10.1 ஓவர்கள் – 2025-ல் கேகேஆர் (இலக்கு 104)
12.1 ஓவர்கள் – 2026-ல் ராஜஸ்தான் (இலக்கு 128)*
12.2 ஓவர்கள் – 2020-ல் மும்பை (இலக்கு 115)
13.0 ஓவர்கள் – 2021-ல் பிபிகேஎஸ் (இலக்கு 135)

- Advertisement -
Published by

Recent Posts