இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் ஒரே ஓவரில் ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி. மேலும் இரு அணிகளிலிருந்தும் சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அணி மாறி வந்திருக்கிறார்கள். எனவே இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஏமாற்றிய சிஎஸ்கே
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 41 ரன்கள் மட்டுமே எடுத்து முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது. மினி ஏலத்தில் புதிய அணியை உருவாக்கியதால் நம்பிக்கை உடன் இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இதைவிட பெரிய சோகமாக தற்பொழுது 84 ரன்னுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. சிஎஸ்கே அணி 100 ரன்கள் எடுக்குமா என்கின்ற சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை அது நடந்தால் இன்னும் மோசமாக இருக்கும்.
ஜடேஜாவின் செய்கை
இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக சர்ப்ராஸ் கான் விளையாடினார். ஆனால் பந்துவீச்சுக்கு வந்த ரவீந்திர ஜடேஜா எல்பிடபிள்யு மூலமாக உடனடியாக அவரை வெளியே அனுப்பினார். இதற்கு அடுத்து உள்ளே வந்த சிவம் துபே ஜடேஜாவின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஆனால் அதே ஓவரில் ஜடேஜா அவரையும் அவுட் செய்தார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறை நடந்த சோகம்.. திரும்பவும் தொடரும் அதே துயரம்.. ரசிகர்கள் கோபம்
இதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா சிவம் துபேவை பார்த்து சுடுவது போல விரல்களில் சைகை செய்து வெற்றி கொண்டாட்டத்தை செய்தார். தன்னுடைய பழைய அணியின் வீரரை பார்த்து அவர் இப்படி கொண்டாடியது ஆச்சரியமாக இருந்தது. தற்போது சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் “எங்கள் மேல் இவ்வளவு வெறுப்பில் இருந்தீர்கள் ஜட்டு?” என்று வருத்தப்பட்டு வருகிறார்கள்.






