இன்னைக்கு கோலியின் விக்கெட்டை தூக்கனும் அதான் பிளானே.. அதுக்கப்புறம் ஆர்சிபி அவ்வளவுதான் – யுஸ்வேந்திர சாகல் பேட்டி

0
52
Virat

ஐபிஎல் 17வது சீசனில் இன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் விராட் கோலி விக்கெட்டை ஆரம்பத்திலேயே கைப்பற்ற வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் சாகல் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளையும் வென்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இரண்டு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்று எடுத்துக் கொண்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பலவீனம் என்று எதுவும் இல்லை. அதே சமயத்தில் ஆர்சிபி அணியின் பேட்டிங் யூனிட் வலிமையாக இருந்தாலும் அவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால் பவுலிங் யூனிட் பலவீனமாக இருக்கிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் போன்ற சிறிய மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு பல ஆண்டுகளாக வெற்றிகரமான சுழல் பந்துவீச்சாளராக இருந்து வந்த சாகலை அந்த அணி நிர்வாகம் வெளியே அனுப்பியது, அவர்களுக்கு மிகப்பெரிய அடியாக மாறி இருக்கிறது. அதற்குப் பிறகு அவர்களுக்கு நிலையாக சிறப்பாக செயல்படும் பந்துவீச்சாளர்கள் இதுவரையில் யாரும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் சாகல் பேசும் பொழுது ” எல்லா காலத்திலும் சிறந்த வீரரான விராட் கோலியின் விக்கெட்டை முதலில் கைப்பற்ற வேண்டும். அப்படி கைப்பற்றி விட்டால் ஆர்சிபி அணி ஆட்டம் முழுவதும் அழுத்தத்தில் இருக்கும். எனவே நாங்கள் முதலில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்ற பார்ப்போம்.

- Advertisement -

விராட் கோலி, தோனி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்கள் பெரிய வீரர்கள். அவர்களுக்கு எல்லா மைதானங்களிலும் ரசிகர்கள் வருவார்கள். பெரிய ஆதரவு அவர்களுக்கு இருக்கும். மேலும் நாங்கள் ரசிகர்கள் யாருக்கும் டிக்கெட் கொடுப்பது கிடையாது. ரசிகர்கள் எல்லோரும் சொந்த பணத்தில் டிக்கெட் வாங்கி அவர்களே பார்க்க வருகிறார்கள்” என நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.