ஐபிஎல் 2025

வைபவ் எழுச்சி சும்மா வரல.. தினம் 600 பந்துகள் கடும் பயிற்சி.. அவர் அப்பா 10 பேருக்கு சாப்பாடு கொடுப்பார் – வைபவின் கோச் பேட்டி

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி ராஜஸ்தான் அணிக்காக தனது முதல் போட்டியை சிறப்பாக தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் 13 வயது வீரரின் பயிற்சியாளர் மனீஷ் ஓஜா வைபவின் தந்தை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

ராஜஸ்தான் அணியில் அசத்தல் தொடக்கம்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கிய 13 வயது வீரர் வைபவ் சூரியவன்சி தனது முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசி அனைவரின் கவனத்தையும் ஒட்டுமொத்தமாக தன் மீது திருப்பினார். அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் 20 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர் என 34 ரன்கள் குவித்து தனது வருகையை உலக கிரிக்கெட்க்கு தன் வருகையை உணர்த்தி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவரது பயிற்சியாளர் மனீஷ் ஓஜா அவரது தந்தை வைபவுக்கு எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நீங்கள் அவரது ஷாட்டில் சக்தியை பார்த்தீர்கள். நான் அவரது உடல்நிலை, பேட் ஸ்விங், சரியான நேரத்தை பார்த்தேன். சிக்சர்களை அடிப்பதற்கு சக்தி மட்டுமே இருந்தால் மல்யுத்த வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். இது ஐந்து வருட பயிற்சி ஒவ்வொரு நாளும் 600 பந்துகள் விளையாடுவது குறித்ததாகும்.

- Advertisement -

10 பேருக்கு சாப்பாடு

அகாடமிகளில் உள்ள மற்ற சிறுவர்கள் ஒரு நாளைக்கு 50 பந்துகள் விளையாடுவார்கள். வைபவின் பயிற்சி அமர்வுகளில் சுமார் 40 வீடியோக்களை நான் யூடியூபி-ல் பதிவேற்றியுள்ளேன். யுவராஜ் சிங் போல அவரது பேட் ஸ்விங்கை நீங்கள் பார்ப்பீர்கள். அவருக்கு 8 வயதாக இருந்த போது அவரது தந்தை சஞ்சீவ் என்னிடம் அழைத்து வந்தார். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள். ஆனால் அப்போதும் கூட அவரது நிலைப்பாடு, செயல்படுத்துதல் அவருக்கு சிறப்பாக இருந்தன. அவரது பெற்றோர் அற்புதமானவர்கள். ஒவ்வொரு இரண்டாவது நாளிலும் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து அவரது தந்தை போட்டிகளுக்கு அவரை அழைத்துச் செல்வார்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவுக்கு 17 வயதில் பட்டையை கிளப்பிய சாதனை சிறுவன்.. சூர்யா செய்த காரியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

வைபவ் கூடுதல் பயிற்சி நேரம் எடுத்தால் அவரது தந்தை கூடுதலாக 10 டிபன் பாக்ஸ்களை பேக் செய்வார். ஒன்று வைபவுக்கு கொடுத்துவிட்டு மற்ற அனைத்தையும் அவருக்கு பந்து வீசும் நெட் பௌலர்களுக்கு கொடுத்து விடுவார். மற்ற நெட் பவுலர்கள் கூடுதல் நேரத்தை ஒதுக்கி அவருக்கு பந்து வீசினார்கள். ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 10 பையன்களுக்கு உணவுகளுக்கு ஏற்பாடு செய்வது அவருடைய பொருளாதாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும். இருந்தாலும் கிரிக்கெட் வைபவின் தொழில் என்பதை அவர்கள் பெற்றோர் உணர்ந்தனர். அதில் அவர்கள் அனைத்தையும் முதலீடு செய்தனர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts