இன்று சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான 17 வயதான ஆயுஸ் மாத்ரே சாதனை உடன் அறிமுகப் போட்டியில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டாவதாக நடைபெறும் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
சிஎஸ்கே அணியில் எதிர்பாராத மாற்றம்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இந்த போட்டியில் டிவால்ட் பிரிவியஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆயுஸ் மாத்ரேவுக்கு தோனி விளையாடும் வாய்ப்பை கொடுத்தார். ஜேமி ஓவர்டன் விளையாட வேண்டிய காரணத்தினால் டிவால்ட் பிரிவியஸ் விளையாட முடியவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு மிகக் குறைந்த வயதில் அறிமுகமானவராக 18 வயதில் அபிநவ் முகுந்த் சாதனை செய்திருந்தார். இந்த நிலையில் ஆயுஸ் மாத்ரே 17 வது வயதில் அறிமுகமாகி இந்த சாதனையை முறியடித்தார். சாதனையுடன் துவங்கிய அவரது இன்னிங்ஸ் அதிரடியாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
சூரியகுமார் செய்த காரியம்
இந்த போட்டியில் முதல் விக்கெட்டாக அரசின் ரவீந்திரன் வெளியேற ஆயுஸ் மாத்ரே மூன்றாவது இடத்தில் விளையாட வந்தார். அறிமுகப் போட்டியில் விளையாடுகின்ற எந்த பதட்டமும் இல்லாமல் பவுண்டரி சிக்சர்களாக நொறுக்கினார். மொத்தம் 15 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 213 ஸ்ட்ரைக் ரேட்டில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : ஆட்டநாயகன் விருது எனக்கு ஏன் குடுத்தாங்க.? நியாயமா இது அவருக்குதான் போய் சேரனும் – விராட் கோலி சுவாரஸ்யம்
இந்த நிலையில் தன்னுடைய மாநிலமான மும்பைக்கு விளையாடும் சிறுவன் ஆயுஸ் மாத்ரேவின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி சூரியகுமார் யாதவ் அவரை வெளியே அனுப்பி வைத்தார். பொதுவாக சூரியகுமார் யாதவ் இந்திய வீரர்கள் யார் சிறப்பாக விளையாடினாலும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை தெரிவிப்பார். இந்த நிலையில் தன்னுடைய சொந்த மாநில இளம் வீரருக்கு எதிரணியில் இருந்த போதும் நேரடியாக பாராட்டு தெரிவித்ததற்கு ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.






