“ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் என்னை மூன்று நான்கு முறை கன்னத்தில் அறைந்தார்” – நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அதிர்ச்சி தகவல்!

0
237
Ross Taylor

நியூசிலாந்து நாட்டு கிரிக்கெட்டில் ராஸ் டெய்லர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மேன் ஆவார். இவர் சமீபத்தில் நியூசிலாந்து நாட்டில் நடந்த கிரிக்கெட் தொடர்களின் போது கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணிக்கு மெட்டில் வரிசையில் பேட்டிங்கில் மிகப் பெரிய தூணாக இருந்தவர் இவர்.

ராஸ் டெய்லர் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் ராஜஸ்தான் டெல்லி ஆகிய அணிகளுக்கு விளையாடியிருக்கிறார். இவர் முதன்முதலில் 2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதற்கடுத்து 2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக அந்த ஒரு வருடம் மட்டுமே விளையாடினார். அதற்கு பிறகு டெல்லி அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

இவர் சமீபத்தில் ஒரு வீரர் புதிதாக ஒரு ஐபிஎல் அணியில் இணையும் பொழுது அந்த வீரர் அந்த அணியில் என்ன மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொள்கிறார் என்று தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை வெளியிட்டு கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ள விஷயம் சமூக வலைதளங்களில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

ராஸ் டைலர் முதல் ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடிய பிறகு 2011ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ஒரே ஒரு ஆண்டு மட்டும் விளையாடினார். இந்த ஒரு ஆண்டில் 12 ஆட்டங்களில் 119 ஸ்டிரைக் ரேட்டில் 183 ரன்களை மட்டுமே எடுத்தார். அவருக்கு அந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மோசமாக அமைந்திருந்தது. அதைவிட மோசமாக அவருக்கு ராஜஸ்தான் அணியில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதைத்தான் தற்போது ராஸ் டெய்லர் வெளியிட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக ராஸ் டைலர் கூறும்பொழுது ” ஒரு வீரர் புதிதாக ஒரு ஐபிஎல் அணிக்குள் போகும் பொழுது அங்கு அவருக்கு எல்லா சூழல்களும் சாதகமாக இருக்காது. அதுவும் அவர் சரிவர செயல்பட முடியாவிட்டால் அங்கு நிலைமை மோசமாகத்தான் இருக்கும். இதற்கு உதாரணமாக 2011ஆம் ஆண்டு நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய பொழுது, மொகாலியில் நடந்த ஒரு ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நாங்கள் 195 ரன்களை துரத்தினோம். அந்த ஆட்டத்தில் நான் டக் அவுட் ஆனேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்றோம் அதற்குப் பிறகு அணி ஊழியர்கள் வீரர்கள் மேல்தளத்தில் உள்ள பாரில் இருந்தனர். ஹோட்டலில் லிப் ஹார்லி, வார்னே உடன் இருந்தார்” என்று கூறினார்…

- Advertisement -

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தொடர்ந்த அவர் ” ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்னிடம் ‘ ராஸ் நீ டக் அவுட் ஆவதற்கு உனக்கு நாங்கள் ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கொடுக்கவில்லை” என்று கூறி என் கன்னத்தில் 3, 4 முறை அறைந்தார். அது கடுமையான அறை இல்லைதான். அதே சமயத்தில் அது வெறும் விளையாட்டு நடிப்பு அல்ல. நான் அந்தச் சூழலில் அதைப் பெரிதாக்க விரும்பவில்லை. ஆனால் தொழில்முறை விளையாட்டு சூழல்களில் இது போல் நடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்!