ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 47வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது துவக்க வீரர் வைபவ் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
ராஜஸ்தான் குஜராத் மோதல்
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க, குஜராத் அணி பேட்டிங் களம் இறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் மற்றும் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியது. 10 ஓவர்களில் 93 ரன்கள் குவித்த அந்த ஜோடியில் சாய் சுதர்சன் 39 ரன்னில் வெளியேறினார். துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் 84 ரன்கள் குவிக்க, பட்லர் 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
இதனால் இறுதியில் ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ஜெய்ஸ்வால் ஒரு முனையில் நிலைத்த நின்ற விளையாட, மற்றொரு துவக்க வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்தினார். தனது இரண்டாவது பந்தில் சிக்ஸர் உடன் துவங்கிய வைபவ் அதற்குப் பிறகு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் என குஜராத் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
14 வயது வீரர் புதிய சாதனை
17 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்த வைபவ், அதற்குப் பிறகு தனது வேகத்தை துளியும் குறைக்காமல் தொடர்ந்து சிக்சர்களை விளாசினார். 34 பந்துகளில் 94 ரன்கள் இருந்தபோது ரஷித் கான் பந்தில் சிக்ஸர் அடித்து 35 பந்துகளில் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை படைத்தார். இதில் 7 போர் மற்றும் 11 சிக்சர்கள் அடங்கும். மேலும் அதிவேக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.
இதையும் படிங்க:6, 6, 4, 6, 4.. 36 வயது பவுலர் 14 வயது சிறுவனிடம் சரண்.. ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்சி.. ஐபிஎல் 2025
வெறும் 14 வயதில் அதிவேக சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இறுதியில் 38 பந்துகளை எதிர் கொண்டு 7 போர் மற்றும் 11 சிக்ஸ் என 101 பந்துகளை எதிர்கொண்டு பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் இறுதியாக ஆட்டம் இழந்தார். தற்போது வரை ராஜஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.






