ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. 45 அடி உயரத்தில் கிரிக்கெட்.. ரசிகர்களுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் புதுமையான அறிமுகம்

0
84

இந்தியாவில் தற்போது 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி வரும் விதமாக மிகத் தீவிரமாக விளையாடி வருகின்றன.

போட்டிகளை பெரும்பாலும் ரசிகர்கள் மைதானங்களிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்லது பேன் பார்க் எனப்படும் பார்க் மாதிரியான திரையரங்கிலோ போட்டியை கண்டு களிப்பார்கள். ஆனால் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒரு புதிய முறை அறிமுகம் செய்துள்ளது.

- Advertisement -

இந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. அதற்குத் தகுந்தவாறு விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் கம்பீரமாக உள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கக்கூடிய அணிக்கு சஞ்சு சாம்சன் அற்புதமாக அணியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாராவின் அனுபவமும் இந்த முறை அணிக்கு பெருமளவில் கை கொடுத்து வருகிறது.

எனவே போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் போட்டியை பார்க்கும் சில அதிர்ஷ்ட ரசிகர்களுக்கு தரையில் இருந்து 45 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சூடான காற்று பலூனில் இருந்து போட்டியை கண்டு களிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

- Advertisement -

இதன் முக்கிய காரணமே போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவே இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல்-லை பொறுத்தவரை பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு அம்சங்களை மேற்கொண்டாலும் வானில் இருந்து போட்டியை பார்ப்பது இதே முதல் முறையாகும். ஒவ்வொரு பலூன் சவாரிக்கும் இரண்டு ரசிகர்கள் மற்றும் ஒரு விமானிக்கும் தனி இடம் இருக்கும்.

இதையும் படிங்க: ஆர்சிபி வெற்றி.. நக்கல் செய்த ராஜஸ்தான்.. ஆனால் சிஎஸ்கே காட்டிய பெருந்தன்மை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

இதற்கான பாதுகாப்பை உறுதி செய்யப்பட்ட பின்னரே, இது இயக்கப்படுகிறது. இந்த சவாரிகள் அனைத்தும் ஸ்டேடியத்தின் இன்னர் கேட் 10க்கு அருகில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் இது நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இது இயக்கப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 22ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியில் இயக்கப்படுகிறது குறிப்பிடப்பட்டது. எனவே இந்த அனுபவம் ரசிகர்களுக்கு நிச்சயம் புது மாதிரியான மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.