ஜெய்ஸ்வால் இல்லை..சில வருஷமா என்கிட்ட ஒரே ஒரு பையன பத்தி மட்டுமே கேக்கறாங்க – சஞ்சு சாம்சன் பேட்டி

0
779
Sanju

நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதனது இரண்டாவது போட்டியில் இரண்டாவது வெற்றி பெற்று இருக்கிறது. இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மீண்டும் முதலில் பேட்டிங் செய்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிடித்திருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னணி வீரர்களான ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் மூன்று பேட்ஸ்மேன்களுமே 36 ரன்களில் வெளியேறி விட்டார்கள். இன்று முதலில் பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருந்தது. இதன் காரணமாக முதல் 10 ஓவர்களில் ரன்கள் எடுப்பது சுலபமாக இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த முறை நான்காவது இடத்தில் அனுப்பப்படும் இளம் வீரர் ரியான் பராக் சந்தித்த முதல் 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். இதற்கு அடுத்து அவர் கடைசியாக சந்தித்த 19 பந்துகளில் 58 ரன்கள் குவித்து மிரள விட்டார். இன்றைய போட்டியில் அவர் ஒட்டுமொத்தமாக 45 பந்துகளில் அதிரடியாக 84 ரன்கள் குவித்தார். இது அவருக்கு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அரைசதம் ஆகும். இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மட்டுமே 49 ரன்கள் குறிப்பிடும்படி எடுத்தார். இறுதிக்கட்டத்தில் ஸ்டப்ஸ் 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, அக்சர் படேல் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் ஆவேஸ் கான் பந்துவீச்சில் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ரியான் பராக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி முடிவுக்கு பின் பேசிய சஞ்சு சாம்சன் “நாங்கள் முதல் பத்து ஓவர்களில் பேட்டிங் செய்த விதத்தில், இம்பேக்ட் பிளேயராக ரோமன் பவலை கொண்டு வர வேண்டி இருக்கும் என்று நினைத்தோம். நாங்கள் அவரிடம் பேட்டிங் செய்ய தயாராக இருக்கும்படி கூறினோம். தற்பொழுது ஐபிஎல் தொடர் மாறி வருகிறது. எனவே இதற்கு ஏற்றபடி நாம் அனைவரும் நெகிழ்வோடு இருக்க வேண்டும். முன்பு 11 வீரர்கள் கொண்ட அணியாக இருந்தது. தற்பொழுது இம்பேக்ட் பிளேயர் வந்திருப்பதால் 15 வீரர்களை வைத்து திட்டமிட வேண்டி இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க: 45 பந்து 84 ரன்.. கடைசி 3 நாளா படுக்கையில்தான் இருந்தேன் – ஆட்டநாயகன் ரியான் பராக் பேச்சு

இந்த போட்டியில் 15 முதல் 17 ஓவர் வரையில் நானும் பயிற்சியாளர் சங்காவும் இம்பேக்ட் பிளேயர் குறித்து நிறைய ஆலோசனை செய்தோம். கடைசி ஓவர்களை யாருக்கு கொடுப்பது என்பது, பந்து வீச்சாளர்கள் எப்படியான ஜோனில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான். இன்று சந்திப் அமைதியாக இருந்தார். இது போலவே ஆவேஸ் கானும் நன்றாக இருந்தார். எனவே நான் அவர்களுடன் சென்றேன். கடந்தநான்கு வருடங்களாக ரியான் பராக் என்பது பெரிய பெயர். நான் எங்கு சென்றாலும் அவரைப் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். அவரிடம் இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுக்கக்கூடிய சிறப்பான விஷயங்கள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.