45 பந்து 84 ரன்.. கடைசி 3 நாளா படுக்கையில்தான் இருந்தேன் – ஆட்டநாயகன் ரியான் பராக் பேச்சு

0
454
Parag

இன்று ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, தனது இரண்டாவது போட்டியில்இரண்டாவது வெற்றி பெற்று, புள்ளி பட்டியலிலும் சிஎஸ்கே அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்து வீசியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் மூன்று பேரும் ரன்கள் பெரிய அளவில் எடுக்காமல் வெளியேறினார்கள். இதன் காரணமாக ஐந்தாவது இடத்திற்கு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய நட்சத்திரமாக உருவாகி இருக்கும் துருவ் ஜுரல் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் ஒரு முனையில் நின்று மிகச் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் ரியான் பராக் 34 பந்தில் அதிரடியாக அரை சதம் அடித்தார். இன்று அவருடைய பேட்டிங் மிகவும் மெச்சூர்டு ஆக இருந்தது. மேலும் சரியான பந்துகளை சரியான பக்கத்தில் அடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரியான் பராக் அன்றிச் நோர்க்கியா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 25 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். இறுதிவரை களத்தில் நின்று 45 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர் என 84 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுப்பதற்கு பெரிய பங்களிப்பை செய்தார்.

இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் இறுதி ஓவர் வரை போட்டியை நகர்த்தி 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட பொழுது அந்த அணியால் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், பெரிய ஏமாற்றம் நிலவியது. கடைசி ஓவரை ஆவேஸ் கான் சிறப்பாக வீசி நான்கு ரன் மட்டும் தந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி ஓவரில் 4 ரன்.. டெல்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்.. சிஎஸ்கே-க்கு அடுத்து 2வது வெற்றி

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசும் பொழுது “இப்போது எல்லா எமோஷன்களும் செட்டில் ஆகிவிட்டது. என் அம்மா இந்த போட்டியை பார்க்க வந்திருந்தார். அவர் என்னுடைய எல்லா கஷ்டங்களையும் பார்த்தவர். எனவே இது மிகவும் சிறப்பான உணர்வு. என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், நான் சரியாக செயல்பட்டாலும் படாவிட்டாலும் என் விஷயங்களை மாற்றிக் கொள்ள மாட்டேன். உள்நாட்டு சீசனில் நிறைய ரன்கள் எடுத்தேன். இன்றைய போட்டியில் யாராவது ஒருவர் ஆட்டத்தை கடைசி வரை எடுக்க வேண்டி இருந்தது. முதல் போட்டியில் சாம்சன் பையா செய்தார். இந்தப் போட்டியில் நான் செய்திருக்கிறேன். கடைசி மூன்று நாட்களாக உடம்பு முடியாமல் பெட்டில் இருந்தேன். இன்று கொஞ்சம் பரவாயில்லை” என்று கூறி இருக்கிறார்