நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் தோல்வி அடைந்த விதம் குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிஷேக் பொரேல் 49 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் ஸ்டெப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்கள் மற்றும் அக்சார் பட்டேல் 14 பந்துகளின் 34 ரன்கள் குவித்தனர்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் 31 ரன்களில் இருந்த போது சாம்சன் காயம் காரணமாக வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் வெற்றி இலக்கை துரத்தி விளையாடினாலும் இறுதிக்கட்டத்தில் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் போட்டி டிராவில் முடிந்தது. அதற்குப் பிறகு சூப்பர் ஓவரில் ஸ்டார்க்கின் அற்புதமான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
தோல்விக்கான காரணம் குறித்து சாம்சன் பேசும்போது “எனது காயம் பரவாயில்லை. நான் மீண்டும் பேட்டிங் செய்வதற்கு தயாராக இருந்தேன். இப்போது எனக்கு நன்றாக இருக்கிறது. எனவே நாளை அதை கவனித்து காயம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். எங்கள் பந்துவீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வெற்றி இலக்கை பார்த்தபோது இது துரத்தக்கூடியது தான் என்று நினைத்தேன். பவர் பிளேவில் நாங்கள் சிறந்த தொடக்கம் பெற்றபோது இந்தப் போட்டியை வெல்ல முடியும் என்று தோன்றியது. இறுதிக்கட்டத்தில் ஸ்டார்க் அற்புதமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். இந்த மரியாதையை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 20வது ஓவரில் அவர் எங்களுக்கு எதிராக அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொடுத்தார். போட்டியில் கடமையாக ஸ்விங் செய்வதே எங்களது திட்டமாக இருந்தது. கடந்த சில வருடங்களாக சந்தீப் இறுதி கட்ட ஓவர்களை எங்களுக்கு வீசி வருகிறார். ஸ்டார்க் எங்களிடமிருந்து வெற்றியை பறித்து விட்டார். இருப்பினும் இந்த சூழ்நிலை டிரெஸ்ஸிங் ரூமில் நேர்மறையான சூழல்களை உருவாக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறார்.