இந்திய கிரிக்கெட்

சூரியவன்சி இந்திய அணியில் இருக்கக் கூடாது.. உடனடியாக அவர் இதை செய்ய வேண்டும்.. பின்னணி காரணம் என்ன?

தற்போது இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரிய வம்சி இந்திய டி20 அணியில் இடம் பெறக் கூடாது என கிரிக்கெட் வல்லுநர்கள் அதிரடியான கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய டி20 அணியில் இடம் பெற்று வரும் வைபவ் சூரியவன்சிக்கு தேவையான அளவு விளையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. கடந்த சில தொடர்களாக அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்.

அதே சமயத்தில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி டிராபி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் ஹசாரே டிராபி நடைபெற இருக்கிறது. மேலும் இந்திய ஏ அணிக்கும் போட்டிகள் இருக்கின்றன.

எனவே இந்த தொடர்களில் அவர் விளையாடுவதில் மூலமாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நல்ல அனுபவத்தை பெற முடியும். இந்திய டி20 அணியில் பெஞ்சில் இருப்பதைவிட அவர் தொடர்ந்து விளையாடுவது மட்டுமே அவர் சிறப்பாக மாறுவதற்கான வழி என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்யாமல் தொடர்ந்து இந்திய ஏ அணியில் வாய்ப்பு கொடுத்து விளையாட வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து சீக்கிரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -
Published by