ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் 32 வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டெல்லி ராஜஸ்தான் மோதல்
டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி ஜேக் பிரேசர் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜேக் பிரேசர் 9 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேற்றினார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் எதிர் பாராத விதமாக டக் அவுட் ஆகி வெளியேற, விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மற்றும் பொரேல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தியது. 63 ரன்கள் குவித்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
38 ரன்களில் கேஎல் ராகுல் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து பொரேல் 49 ரன்னில் நடையை கட்டினார். அதற்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்டெப்ஸ் 18 பந்தில் 34 ரன், கேப்டன் அக்சார் பட்டேல் 14 பந்துகளில் 34 ரன்கள் குவிக்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சஞ்சு சாம்சன் எதிர்பாராத விதமாக 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்து காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரியான் பராக் 8 ரன்னில் ஆட்டம் இழக்க, நித்திஷ் ராணா டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:பும்ராவின் ஓவரை நான் வெளுத்து வாங்க.. காரணமே இந்த விஷயம்தான்.. இனி இப்படித்தான் ஆடுவேன் – கருண் நாயர் விளக்கம்
போட்டியின் இறுதி கட்டத்தில் 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ் ரானாவை ஸ்டார்க் வெளியேற்றினார். ஜுரேல் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் விளையாட அதற்குப் பிறகு 12 பந்துகளில் 22 ரன்கள் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு தேவைப்பட 19ஆவது ஓவரை வீசிய மோஹித் சர்மாவின் ஓவரில் 14 ரன்கள் வந்தது. அதற்குப் பிறகு ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட கடைசி ஓவர் வீசிய ஸ்டார்க் 5 அற்புதமான யார்க்கர் பந்துகளை வீசி 8 மட்டுமே விட்டுக் கொடுத்ததால் 4 வருடங்கள் கழித்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் ஹெட்மையர் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இறங்கினார்கள். அதிலும் சிறப்பாக வீசிய ஸ்டார்க் 6 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு ரன் அவுட்டுகளையும் நிகழ்த்தினார். அதற்குப் பிறகு 12 ரன் எடுத்தால் வெற்றியில் என்ற இலக்குடன் டெல்லி அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்டெப்ஸ் ஆகியோர் களமிறங்க முதல் பந்தில் 2 ரன், இரண்டாவது பந்தில் போர் மற்றும் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்டெப்ஸ் இடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். சந்தீப் சர்மா வீசிய 4வது பந்தில் சிக்சர் அடித்து போட்டியை அபாரமாக முடித்துக் கொடுத்து டில்லி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.