இந்திய கிரிக்கெட்

வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்.. விராட் ரோகித் இடம் இளம் வீரர்கள் உடனடியாக இதை செய்யுங்கள் – ரகானே அறிவுரை

​வரவிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே பல சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

​இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

​இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அஜிங்கியா ரஹானே இதுகுறித்து பேசும்போது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்களிடம் இருந்து நீங்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையையும் எப்படி கையாள்வது, வெற்றிகளையும் தோல்விகளையும் எப்படி சமமாக எதிர்கொள்வது என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்”

“ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கடி சூழல் மாறிக்கொண்டே இருக்கும், அதை எப்படி சமாளிப்பது என்பதில் அவர்களுக்கு அசாத்திய திறமை உண்டு. அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி எல்லாவற்றையும் பார்த்துவிட்டார்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் எவ்வளவு கற்றுக் கொண்டாலும் அது குறைவாகவே இருக்கும். அதனால் இளம் வீரர்கள் தயங்காமல் அவர்களிடம் சென்று கேள்விகளைக் கேட்டு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது பல ஆண்டு கால கடின உழைப்பால் ஏராளமான சாதனைகளைக் குவித்துள்ளனர். இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் அணியில் இடம்பெறுவது ஒட்டுமொத்த அணியின் பலத்தையும் பல மடங்கு உயர்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நியூசிலாந்து மண்ணில் அவர்களின் பேட்டிங் திறமை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by