இவங்க ரெண்டு பேர் ஹோட்டல் ரூம்ல கூட பிளான் போட்டாங்க.. வெற்றிக்கு காரணம் இதுதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
1186
Sanju

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆர்சிபி அணியை ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.

இன்று டாஸ் வென்று ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அத அணிக்கு அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 19 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 30 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இன்னும் ஒரு இளம் வீரர் ரியான் பராக் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசி இருக்கும் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும் பொழுது “கிரிக்கெட்டும் வாழ்க்கையும் நமக்கு கற்றுக் கொடுத்தது என்னவென்றால், நமக்கு நல்ல மற்றும் மோசமான சில கட்டங்கள் இருக்கும், ஆனால் அதிலிருந்து மீண்டு எழுந்து வரவேண்டிய தன்மை நமக்கு இருக்க வேண்டும். இன்று நாங்கள் பீல்டிங், பவுலிங், பேட்டிங் என மூன்று துறைகளிலும் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய பந்து வீச்சாளர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் எதிரணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் திட்டம் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக எங்கள் அணியின் பயிற்சியாளர்கள் சங்கக்கரா மற்றும் ஷேன் பாண்ட் இருவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். அவர்கள் ஹோட்டல் அறையில் கூட எப்படி திட்டம் வகுப்பது என நீண்ட நேரம் பேசி இருக்கிறார்கள். அஸ்வின்மற்றும் போல்ட் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : தோத்தாலும் பெருமைப்படறேன்.. இந்த ஐபிஎல்-ல ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சி இருக்கோம் – பாப் டு பிளேசிஸ் பேட்டி

அதே சமயத்தில் ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் போன்றவர்கள் மிகவும் இளையவர்கள். இந்த அளவில் அவர்கள் செயல்படும் விதம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு பிரச்சனை இருக்கிறது. எங்கள் அணியில் பலருக்கு இருமலுடன் உடல்நிலை சரியில்லை. ரோமன் பவல் ஆட்டத்தை நன்றாக முடித்தார். நாங்கள் அடுத்த ஆட்டத்தை எதிர்நோக்குகிறோம். எங்களுக்கு இன்று பயண நாள் மேலும் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.