எனக்கு இவங்கள நினைச்சு பெருமைதான்.. ஆனா இந்த ஒரு விஷயம் எங்களை தோற்கடிச்சிடுச்சி – சஞ்சு சாம்சன் பேட்டி

0
423
Samson

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டாவது தகுதி சுற்றில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.

இன்று போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஹெட் 28 பந்தில் 34 ரன்கள், ராகுல் திரிபாதி 15 பந்தில் 37 ரன்கள், ஹென்றி கிளாசன் 34 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. போல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 21 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். ஆனால் இதைத்தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் வீரர் ரியான் பராக் இருவரும் இன்று ஏமாற்றம் அளித்து சொற்ப ரன்னில் வெளியேறினார்கள்.

ஆனாலும் ஒரு முனையில் துருவ் ஜுரல் நின்று வெற்றிக்காக கடுமையாக போராடினார். அவர் ஆட்டம் இழக்காமல் 35 பந்தில் 56 ரன்கள் எடுத்த போதும் அது வெற்றிக்கு போதவில்லை. ராஜஸ்தானி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷாபாஷ் அகமத் மூன்று விக்கெட், அபிஷேக் ஷர்மா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

தோல்வி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “எங்கள் பந்துவீச்சாளர் குறித்து நான் பெருமை கொள்கிறேன். பனி எப்பொழுது வருகிறது என்பது குறித்து நம்மால் யூகிக்க முடிவதில்லை. இரண்டாவது பேட்டிங் செய்யும் பொழுது பந்து திரும்பியது. எங்களுடைய வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர்கள் இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு அது நன்றாக வேலை செய்தது. இந்த இடத்தில் அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: 16 வருட பரிதாபம்.. பார்ட் டைம் பவுலர்களிடம் சுருண்ட ராஜஸ்தான்.. ஹைதராபாத் பைனலுக்கு முன்னேறி அசத்தல்

ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல் ராஜஸ்தான் அணிக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் அணிக்காகவும் சிறப்பாக செயல்பட முடிந்த வீரர்கள். உம்ராவுக்கு அடுத்து விக்கெட் மற்றும் எக்கானமியில் சந்திப் சர்மா இருக்கிறார்.அவர் ஏலத்தின் மூலமாக வர முடியாமல் பின்பு வந்து மிகப்பெரிய அளவில் ராஜஸ்தான் அணிக்கு விளையாடி இருக்கிறார். ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் கேகேஆர் அணியின் உற்சாகம் சிறப்பானதாக இருக்கிறது. கடந்த 15, 16 ஆண்டுகளில் நடக்க சிறப்பான ஒரு இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.