16 வருட பரிதாபம்.. பார்ட் டைம் பவுலர்களிடம் சுருண்ட ராஜஸ்தான்.. ஹைதராபாத் பைனலுக்கு முன்னேறி அசத்தல்

0
830
SRH

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பேட்டிங்கில் முதல் ஓவரை சிறப்பாக ஆரம்பித்த அபிஷேக் சர்மா அதே ஓவரில் ஐந்து பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து பொறுமையாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பாக விளையாடிய அதிரடி வீரர் ஹென்றி கிளாசன் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. டிரென்ட் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கோலர் கேட் மோர் 16 பந்தில் 10 ரன் மட்டும் எடுத்து சுமாரான துவக்கத்தை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 11 பந்தில் 10 ரன், ரியான் பராக் 10 பந்தில் 6 ரன், அஸ்வின் மூன்று பந்தில் ரன் ஏதும் இல்லாமல், ஹெட்மயர் 10 பதில் நான்கு ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஹைதராபாத் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் சபாஷ் அகமத் மற்றும் அபிஷேக் ஷர்மா சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து துருவ் ஜுரல் ஒரு முனையில் தனியாக போராடினார். இறுதியில் துருவ் ஜுரல் ஆட்டம் இழக்காமல் 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டும் எடுத்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்று இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணியுடன் விளையாட தகுதி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியை விட ஆர்சிபி ரசிகர்கள் பெரியவர்கள்.. அவங்கதான் இந்திய அணியில் என்னை சேர்த்தாங்க – தினேஷ் கார்த்திக் பேட்டி

17 ஆவது ஆண்டாக நடைபெறும் ஐபிஎல் தொடரில், 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்டம் வென்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து 16 ஆண்டுகளாக அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பை எட்டாத விஷயமாகவே சோகமாக அமைந்திருக்கிறது. மேலும் இன்றைய போட்டியில் பார்ட் டைம் பவுலர்கள் ஷாபாஷ் அஹமத் மற்றும் அபிஷேக் சர்மாவிடம் சிக்கி தோற்றது விசித்திரமாக அமைந்திருக்கிறது.