மழை.. இலங்கை ஹேப்பி.. பாக் சோகம்.. இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை பைனலில் விளையாட வாய்ப்பு எப்படி இருக்கு..!

0
3217
ICT

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, டி20 வடிவத்தில் ஆசியக் கோப்பை யுஏஇ-ல் நடைபெற்றது. இந்த தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் காயத்தால் விலகினார்கள்.

இந்த நேரத்தில் டி20 உலகக்கோப்பைக்காக ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் சில பரிசோதனை முயற்சிகள் செய்து, அந்த முயற்சிகள் தோல்வி அடைந்த காரணத்தினால், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் இந்திய அணி வெளியேறியது.

- Advertisement -

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியே அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இருக்கிறது. இந்திய அணி ஏழு முறை வென்றிருக்கிறது. இதற்கடுத்து இலங்கையும் மிகச் சிறப்பாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடி ஆறுமுறை கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணி நேற்று இந்திய அணி வெற்றி பெற்றவுடன் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இருந்து வெளியேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒரு அணி மோதத்தான் வாய்ப்பு.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் போட்டிகள் மழையால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. ஒருவேளை நாளை இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி, மழையால் கைவிடப்பட்டு டிரா ஆனால், யார் இறுதிப் போட்டிக்கு வருவார்கள் என்ற கேள்வி இருக்கிறது?

தற்பொழுது இந்திய அணி இரண்டு ஆட்டங்களையும் இரண்டாவது சுற்றில் வென்று நான்கு புள்ளிகளோடும், பெரிய ரன் ரேட் உடனும் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்து நல்ல ரன் ரேட்டில், இரண்டில் ஒரு ஆட்டத்தை வென்று இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் இரண்டில் ஒரு ஆட்டத்தை வென்று இருந்தாலும், இந்தியாவுடன் ஏற்பட்ட மோசமான தோல்வியால் ரன் ரேட்டில் பெரிய அடி வாங்கி இருக்கிறது.

எனவே நாளை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மழையால் டிரா என்றால், புள்ளிகள் அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் ஒரே மாதிரி இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது!