இந்தியாவை காப்பாற்றிய மழை; இன்னும் 2 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டிருந்தால் அவ்வளவு தான்! 3வது ஒருநாள் போட்டியில் நடந்த சுவாரஷ்யம்!

0
13485

3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை படுதோல்வியில் இருந்து காப்பற்றியுள்ளது மழை.

நியூசிலாந்து – இந்தியா அணிகள் ஆடிய 3வது ஒருநாள் போட்டி தற்போது கிறிஸ்ட்சர்ச் கிரவுண்டில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, ஷ்ரேயாஸ் ஐயர் 49(59), வாஷிங்டன் சுந்தர் 51(64) ரன்கள் எடுத்து இருவரும் அணியின் ஸ்கொரை உயர்த்தினார் எடுக்க, இந்தியா 47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மில்னே மற்றும் டேரல் மிச்சல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன், டெவான் கான்வெ இருவரும் துவக்க வீரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தது.

பின் ஆலன் 57 ரன்கள் அடித்து உம்ரான் மாலிக் பந்தில் அவுட்டாகினர். டெவான் கான்வெ 38*, கேப்டன் வில்லியம்சன் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

- Advertisement -

18 ஓவர்கள் முடிவில் 104/1 என நியூசிலாந்து அணி இருந்தபோது, வேகமாக மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது.

இந்தியாவை காப்பாற்றிய மழை

மழை வந்ததால் அனைவரும் டக்-வோர்த் லூயிஸ் முறை இந்திய அணிக்கு ஆபத்து ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தில் இருந்தனர். அதற்கு ஏற்றவாறு நியூசிலாந்து அணியும் டக்-வோர்த் லூயிஸ் முறையில், இலக்கை விட 50 ரன்கள் அதிகமாக அடித்திருந்தனர்.

50 ஓவர்கள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் குறைந்தது 20 ஓவர் வீசப்பட்டிருந்தால் மட்டுமே டிஎல்எஸ் முறை அமலுக்கு எடுத்து வரப்படும். இல்லையெனில் அந்த முறை செல்லாது.

நியூசிலாந்து அணி தனது இன்னிங்சில் வெறும் 18 ஓவர்கள் மட்டுமே விளையாடியது. அதற்குள் மழை பெய்துவிட்டதால் மூன்றாவது போட்டியின் போது டிஎல்எஸ் பயன்படாது என தெரியவந்தது.

மேலும் போட்டி எத்தனை ஓவர்களாக குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே நிலவி வந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அதற்கும் அவசியம் ஏற்படவில்லை.

இறுதியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்டம் துவங்காததால், 3வது ஒருநாள் முடிவு இன்றி போட்டி ரத்து ஆனதாக நடுவர்கள் இரு அணி கேப்டன்களிடமும் அறிவிப்பு கொடுத்தனர்.

முதல் போட்டியில் பெற்ற வெற்றியுடன் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. தொடர் நாயகனாக டாம் லேத்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.