கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ரிசர்வ் டேவிலும் மழை.. போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்.. ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு யாருக்கு வாய்ப்பு.. முழு தகவல்கள்!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் ஆசிய கோப்பையின் இரண்டாவது சுற்றுப்போட்டி, ரசிகர்கள் பயந்தது போலவே மழையின் குறுக்கீடு காரணமாக, யாரும் விரும்பத்தக்காத வகையில் நேற்று தொடர்ந்து விளையாட முடியாமல் இன்று ரிசர்வ் டேவுக்கு வந்திருக்கிறது!

- Advertisement -

நேற்றைய போட்டி அளவில் எடுத்துக் கொண்டால் டாஸ் தோற்று இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, அவர்கள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாடுவது என்கின்ற முடிவோடு வந்தார்கள். இந்த வகையில் இந்திய அணியின் திட்டங்கள் மிகத் தெளிவாக இருந்தது. அதைச் செயல்படுத்திய விதமும் அருமையாக இருந்தது.

மிகக்குறிப்பாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பாகிஸ்தான் அணியின் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாடுவது என்கின்ற நோக்கத்தை மிகத் தைரியமாக வெளிப்படுத்தினார். அவர் பவர் பிளேவில் ஆட்டத்தை கட்டமைத்ததுதான் இந்தியா அணிக்கு பெரிய நேர்மறையான விஷயமாக இருந்தது.

அதே நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு முனையில் விக்கெட்டை காப்பாற்றி, பவர் பிளே முடிந்து சுழற் பந்துவீச்சாளர் வரும் வரை பொறுமை காத்து, பிறகு அதிரடியாக ரன்கள் கொண்டு வந்து அசத்தி தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணி 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் இருக்கிறார்கள். தற்போதைய இந்திய பேட்டிங் யூனிட்டில் இவர்கள் இருவருக்கும்தான் போட்டி பயிற்சி தேவையாக இருக்கிறது. ரோகித் சர்மா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் எல்லோரும் ஏற்கனவே நன்றாக விளையாடி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடர்ந்து ரிசர்வ் டே போட்டி நடைபெறுமா? என்று பார்த்தால், அங்கு காலையிலிருந்து மழை கொட்டி தீர்த்து தற்பொழுது நின்று இருக்கிறது. மீண்டும் பெய்யாது என சொல்ல முடியாத நிலைமையில்தான் மேகம் இருக்கிறது.

கழிவுநீர் வெளியேற்ற வசதி மைதானத்தில் இல்லை என்கின்ற காரணத்தினால், மைதானத்தை தயார் செய்வது பெரிய அளவில் நேரம் எடுக்கும். நேற்றே பார்த்தோம். வானிலை தகவல்படி இன்று 99 சதவீதம் மழை பெய்யும். மிக அதிகபட்சமாக இன்றைய நாள் போட்டி முழுதாக ரத்து செய்யப்படவே வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

அதே சமயத்தில் இந்திய அணி நாளை இலங்கை அணி உடன் மோத இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தங்களுடைய இரண்டாவது சுற்று முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை வென்று முன்னிலையில் இருக்கிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி டிரா ஆனால் இந்தியாவுக்கு புள்ளிப்பட்டியலில் பெரிய பின்னடைவு உருவாகும். மிகக்குறிப்பாக அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றே ஆகவேண்டும். மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டாலும் இந்திய அணிக்கு அது சிக்கல்தான். இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமலும் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by