டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய U19 அணிக்கு தேர்வு.. தமிழக வீரர்களுக்கு நடந்த சோகம்.. முழு விவரம்

0
165
Samit

இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்டுக்கு இந்திய அண்டர் 19 அணியில் இடம் கிடைத்திருக்கிறது. தற்போது இவர் கர்நாடகா மகாராஜா டி20 லீக்கில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டில் கர்நாடக அணிக்காக 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கூச் பெஹார் டிராபியில் இடம்பெற்றார். இந்த தொடரில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதைத்தொடர்ந்து கர்நாடகா மகாராஜா டி20 லீக்குக்கு வந்தார். தற்போது இன்னொரு பெரிய வாய்ப்பாக இந்திய அண்டர் 19 அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி இந்திய சுற்றுப்பயணம்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவிற்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட வெள்ளைப் பந்து மற்றும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட சிவப்புப் பந்து தொடர்களில் விளையாடுகிறது.

இதற்காக இரண்டு இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு அணியிலும் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இடம்பெற்று இருக்கிறார். இவர் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆக இருப்பதோடு மிதவேக பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு தற்போது மட்டுமில்லாமல் எதிர்காலத்திலும் நல்ல முக்கியத்துவம் கிடைக்கும். மேலும் கர்நாடக மாநில அணிக்காக அடுத்தடுத்து அனைத்து வடிவத்திலும் அறிமுகம் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தமிழ்நாட்டு சோகம்

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு அணிகளிலும் பல மாநிலங்களை சேர்ந்த இளம் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த எந்த வீரரும் இதில் இல்லை. மாநில கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது போல தெரிகிறது.

இதையும் படிங்க : தோனி இருந்தும்.. ஐபிஎல் 2017 பைனலில் வெறும் 1 ரன்னில் நாங்க தோக்க காரணம் இதுதான் – சஞ்சீவ் கோயங்கா பேட்டி

இந்தியா ஆஸ்திரேலியா அண்டர் 19 போட்டிகள் அட்டவணை :

21 செப்டம்பர்: 1வது ஒரு நாள் புதுச்சேரி, காலை 9:30
23 செப்டம்பர்: 2வது ஒரு நாள், புதுச்சேரி, காலை 9:30
செப்டம்பர் 26: 3வது ஒரு நாள், புதுச்சேரி, காலை 9:30

30 செப்டம்பர்: 1 வது மல்டி-டே, சென்னை, காலை 9:30
7 அக்டோபர்: 2 வது மல்டி-டே, சென்னை, காலை 9:30

- Advertisement -