“நாயகன் உதயமாகிறான்” கேப்டனாகிறார் ராகுல் டிராவிட் மகன்!

0
2675

கர்நாடக அண்டர்-14 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ராகுல் டிராவிட் இளைய மகன் அன்வாய் டிராவிட்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் இளைய மகன் அன்வாய் டிராவிட், கர்நாடக அண்டர் 14 அணிக்காக விளையாடுகிறார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக சில காலம் இருந்து வந்தார். தற்போது அன்வாய் டிராவிட் கர்நாடகா அண்டர் 14 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார்.

வருகிற ஜனவரி 23 முதல் பிப்ரவரி மாதம் வரை கேரளாவில் நடைபெறும் ஜோனல் தொடருக்கு அன்வாய் டிராவிட் தேர்வு செய்யப்பட்டதோடு, அண்டர் 14 அணிக்கு கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இதே கர்நாடகா மிக சிறப்பாக பேட்டிங் செய்த அன்வாய் டிராவிட், சில ரன்கள் வித்தியாசத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் முக்கியமான அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியதால் பல்வேறு பத்திரிக்கைகளிலும் இவரின் பெயர் அடிபட்டது. இப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த பொறுப்பு சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய காரணாதிற்காக கொடுத்திருப்பதாக அந்த அணி நிர்வாகம் கூறியது. கேப்டன் பொறுப்பில் எவ்வாறு செயல்படப் போகிறார் என்கிற ஆவலும் பலருக்கு இருக்கிறது.

டிராவிட்டுக்கு சமித் டிராவிட் என்கிற மூத்த மகன் இருக்கிறார். அவரும் அண்டர் 14 அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்து வரும் சமித், அண்டர் 17 அணிக்கு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

“ராகுல் டிராவிட் மகன் என்கிற அழுத்தம் அன்வாய் டிராவிட்டுக்கு நிறைய இருந்தாலும் அதை பொறுப்புடன் கையாண்டு அண்டர் 14 அணிக்கு நன்றாக செயல்பட்டு வருகிறார். முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் விளையாடி வருகிறார்.” என அணியின் பயிற்சியாளர் அன்வாய் டிராவிட்டுக்கு கேப்டன் பொறுப்பை அறிவித்த பிறகு பேசினார்.