2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அஸ்வின் வெளியிட்ட யூடியூப் வீடியோ ஆஸ்திரேலிய வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்தது பற்றி ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.
நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் ராகுல் டிராவிட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கு பெற்ற குட்டி ஸ்டோரி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் பல சுவாரசியமான சம்பவங்களை வெளியிட்டார்கள்.
2023 ஆம் ஆண்டு சர்ச்சை
2023 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருந்தது. முதல் இரண்டு போட்டிகளை வென்று முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் இந்த ஊரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததற்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா வீரர்கள் சுழல் பந்து வீச்சில் எப்படி தடுமாறுகிறார்கள் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து வீடியோ வெளியிட்டார். இதை எடுத்து ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அஸ்வின் இப்படியான வீடியோவை வெளியிட்டு இருக்கக் கூடாது என விமர்சித்தார்கள்.
ராகுல் டிராவிட் சுவாரசியம்
இது குறித்து ராகுல் டிராவிட் “அப்போது நீங்கள் வெளியிட்ட வீடியோவில் இருந்து ஒரு சிறிய பகுதி எனக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. நீங்கள் அந்த வீடியோவில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஐடியா கொடுத்து விட்டீர்கள். ( நகைச்சுவையாக) ஆனால் எனக்கு இன்னொரு விஷயமும் வந்தது. அதில் உங்களைவிட அஸ்வின் சிறப்பாக பயிற்சி அளிக்கிறார் என்று கூறினார்கள்”
இதையும் படிங்க : கம்பீரின் பதவி தப்பிக்க காரணமே ஸ்ரேயாஸ் ஐயர்தான்.. ஆனா தனக்கு பிடிக்காதவர்களை நீக்கறார் – சடகோபன் ரமேஷ் விமர்சனம்
“மேலும் நீங்கள் தமிழில் வெளியிட்டிருந்த வீடியோவை புரிந்து கொள்ள ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தமிழ் தெரிந்த ஒருவரை இதற்கு பயன்படுத்தி இருக்கலாம். அதன் மூலம் அவர்கள் ஏதாவது விஷயத்தை எடுத்து இருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது” என்றும் கூறினார்.






