தனக்கு பிடிக்காதவர்களை இந்திய அணியில் இருந்து தலைமை பயிற்சியாளர் கம்பீர் நீக்கி விடுகிறார் என தமிழ்நாடு மற்றும் இந்திய முன்னாள் வீரர் சடகோமன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசியக்கோப்பை இந்திய டி20 அணியில் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடக்கூடிய ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் தேர்வு செய்யாமல், இவர்களைவிட குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் கில்லை தேர்வு செய்ததுடன் துணை கேப்டன் ஆகவும் சடகோபன் ரமேஷ் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
பிடிக்காதவர்களை நீக்குகிறார்
இந்த நிலையில் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்களை எப்பொழுதும் ஆதரிப்பார் என்கின்ற நம்பிக்கை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்போது அவர் தனக்கு பிடிக்கும் வீரர்களை வைத்துக் கொள்வதாகவும், பிடிக்காத வீரர்களை கைவிட்டு விடுவதாகவும் சடகோபன் ரமேஷ் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சடகோபன் ரமேஷ் பேசும்பொழுது “கம்பீர் தனக்கு பிடித்த வீரர்களை வைத்துக் கொள்கிறார். பிடிக்காத வீரர்களை அப்படியே கைவிட்டு விடுகிறார். கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீர் பயிற்சியில் நாம் மோசமாக செயல்பட்ட காரணத்தினால் இங்கிலாந்தில் நாம் தொடரை சமன் செய்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் விராட் கோலி ரவி சாஸ்திரி கூட்டணியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற ஆரம்பித்துவிட்டது. ஆனால் இப்பொழுது சமன் செய்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது”
கம்பீர் வெற்றிக்கு காரணம் ஸ்ரேயாஸ்
“கம்பீரின் உண்மையான பெரிய வெற்றி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிதான். அந்த வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனாலும் கம்பீர் ஸ்ரேயாஸ் ஐயரை ஆதரிக்கவில்லை. ஜெய்ஸ்வால் போன்ற ஒரு வீரரை அனைத்து வடிவங்களிலும் எக்ஸ்பெக்டர் என்ற வகையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரைக் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் வைத்திருப்பது அநியாயம் ஆனது”
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் புதிய ரோல்.. கேரளா லீக்கில் சாம்சன் ஆச்சரிய முடிவு.. கலக்கும் கம்பீர் – வெளியான தகவல்கள்
“ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நம்ப முடியாத செயல் திறனை வெளிப்படுத்தினார். அவர் இந்தியாவின் வெள்ளை பந்து அணிகளில் தவிர்க்க முடியாத வீரராக இருக்க வேண்டும். வீரர்கள் நல்ல ஃபார்மிலும் நம்பிக்கையிலும் இருக்கும் பொழுது அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு இதெல்லாம் மங்கி இருக்கும் பொழுது ஆதரிப்பதில் அர்த்தம் இல்லை. ஸ்ரேயாஸ் ஐயரின் வானளாவிய நம்பிக்கை மற்றும் ஃபார்மை அறுவடை செய்வதற்கான நேரம் இதுதான்” என்று கூறியிருக்கிறார்.






